நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தேர்வெழுதிய வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வீடியோவை ஆய்வு செய்யும் குழுவின் முடிவு அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவு வெளியடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக தேர்வை செப்.24 முதல் செப்.29 வரை ஆன்லைனில் நடத்திய தேர்வை 1.50 லட்சம் மாணவர்கள் எழுதினர். முறைகேடாக தேர்வு எழுதியது தொழில்நுட்ப அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 3,000 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment