நர்சரி பள்ளிகளில் ஆன்லைன் மூலம் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பம்


நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில், இலவச சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார்.ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், எல்.கே.ஜி., வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. 

இதற்காக அனைத்து பள்ளிகளில், 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசு அறிவித்துள்ளது.

திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர் முனிசுப்ராயன் கூறியதாவது:

நம் கல்வி மாவட்டத்தில், 19 தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 350 மாணவர்கள் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின்கீழ் சேர்க்கைக்கான குலுக்கல், கடந்த, 3ம் தேதி நடந்தது.இதில், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் மட்டும், சில இடங்கள் காலியாக உள்ளன. 

இதற்காக, இரண்டாம் கட்டமாக, rte.tnschools.gov.in என்ற இணைய தளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் போது, மாணவரின் புகைப்படம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பிறப்பு சான்று, இனம், இருப்பிடம் மற்றும் வருமான சான்று ஆகியவை இணைந்து விண்ணப்பிக்க வேண்டும்.

தனியார் பள்ளி இருக்கும்இடத்தில் இருந்து, 1 கி.மீட்டர் துாரத்திற்குள் மாணவரின் பெற்றோர் வசிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive