புதிய கல்விக் கொள்கை குறித்து இணையவழி கலந்துரையாடல்: கருத்துகளை தெரிவிக்க யுஜிசி அழைப்பு


புதிய கல்விக் கொள்கை குறித்த இணையவழி கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை (அக்.4) வரை நடைபெறவுள்ளதாக யுஜிசி தெரி வித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர்ரஜ்னிஷ் ஜெயின், அனைத்துபல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அறிக்கை தயாரிக்க திட்டம்

புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பல்வேறு தரப்பினருடன் மத்திய அரசு சார்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கல்விக்கொள்கையின் முக்கிய அம்சங்களை ஒருங்கிணைத்து அறிக்கை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கல்வியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் பரிந்துரைகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது.

நாளை கடைசி நாள்

இதுதவிர கல்விக் கொள்கையை செயல்படுத்துதல் தொடர்பான இணையவழியிலான கலந்துரையாடல் (https://innovateindia.mygov.in/nep2020-citizen/) நேற்று முன்தினம் தொடங்கியது. இது நாளை (அக்.4) வரை நேரலையாக நடைபெறுகிறது.

இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களும் பெரிய அளவில் விளம்பரம் செய்து கல்வியாளர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பெற வேண்டும்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive