சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கான ஆன்லைன் இலவச பயிற்சி வகுப்புக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இன்று தொடங்கி 6 நாட்கள் நடைபெறும் இந்த வகுப்பில், தேர்வுக்கு தயாராவோர் மட்டுமின்றி ஆர்வமுள்ளவர்களும் கலந்துகொள்ளலாம்.
இதுதொடர்பாக தமிழக அரசின் அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரலும், கூடுதல் தலைமைச் செயலருமான வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகஅரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் சார்பில் அக். 5 (இன்று) முதல் 12-ம்தேதி வரை (சனி, ஞாயிறு தவிர)6 நாட்களுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதில் யுடியூப் வழியாக ஆர்வமுள்ள அனைவரும் இணைந்து கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளில் சிறந்த அறிஞர்கள் கருத்துரையாற்றுகிறார்கள். காலை 11 முதல் மதியம் 12.30 மணிவரை, பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை என இரு வேளைகளில் இந்த கருத்துரைகள் நடைபெறும். இந்த பயிற்சிக்கான இணையதள முகவரி: www.civilservicecoaching.com, யுடியூப் - AICSCCTN, யுடியூப் இணைப்பு- https://www.youtube.com/channel/UCb1iqYSU74A8lS_4sW0VqNQ.
0 Comments:
Post a Comment