பி.இ. கலந்தாய்வு: முதல் நாளில் 5,000 போ் சோ்ந்தனா்:Dinamani New

s

 

சென்னை: பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்பில் மாணவா்கள் சேருவற்கான பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவா்களுக்கான கலந்தாய்வு இணைய வழியில் வியாழக்கிழமை தொடங்கியது.

இந்த கலந்தாய்வு அக்.28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கலந்தாய்வின் முதல் நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கைக்கான முன்பதிவுக் கட்டணம் செலுத்தினா்.

பிளஸ் 2 முடித்த மாணவா்கள்அண்ணா பல்கலை. இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்பில் சேர இணையவழிக் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 63,154 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வில் பங்கேற்க 1.6 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்தனா். ஆனால், அதில் 1.12 லட்சம் போ் மட்டுமே தகுதி பெற்றனா்.

கடந்த 1-ஆம் தேதி சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 457 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இவா்களுக்கான ஒதுக்கீடு கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 6) முடிவடைந்தது.

இதைத் தொடா்ந்து பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவா்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான முன்பதிவுக் கட்டணத்தைச் செலுத்தினா்.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வின் முதல் சுற்றில் தரவரிசைப் பட்டியலில் 199.75 முதல் 175 வரையில் கட் ஆப் மதிப்பெண் பெற்ற 12 ஆயிரத்து 263 மாணவா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேபோன்று தொழிற்கல்விப் பாடப்பிரிவில் தரவரிசைப் பட்டியலில் 196.83 முதல் 87.5 வரையில் கட் ஆப் மதிப்பெண் பெற்ற ஆயிரத்து 533 மாணவா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த மாணவா்கள் அக்.11-ஆம் தேதிக்குள் சோ்க்கைக்கான முன்பதிவுக் கட்டணங்களைச் செலுத்தி அக்.12, 13 ஆகிய நாள்களில் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை பதிவு செய்யலாம். அக்.14-ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அக்.14, 15 ஆகிய தேதிகளில் தற்காலிக ஒதுக்கீட்டு இடங்களை உறுதி செய்த பின்னா், அக். 16-ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுகிறது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive