சென்னை: பள்ளி கல்வி துறையில், ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கானவயது வரம்பு குறைக்க பட்டு உள்ளது. இனி, 40வயதுக்கு மேலானவர்கள்ஆசிரியர் பணியில் சேர முடியாது.
தமிழக பள்ளி கல்வி துறையில், நிர்வாக ரீதியாகபல்வேறுசீர்திருத்தங்கள்மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரியில், புதியஅரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், வட்டார கல்வி அதிகாரி, தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிநியமனத்துக்கான வயது வரம்பு, 40 வயது என, முடிவு செய்யப்பட்டது. இந்தஅரசாணையின் நகல், தற்போதுஅனைத்து கல்வி அதிகாரிகள் மற்றும்அலுவலகங்களுக்கும்அனுப்பப்பட்டுள்ளது.
இந்தஅரசாணையை பின்பற்றிமட்டுமே, இனி பணி நியமனம்மேற்கொள்ளப்படும் என, கூறப்பட்டுள்ளது. இதுவரை, மாநிலஅரசு ஊழியர்களின் ஓய்வு வயதான, 58 வயது நிரம்பாத அனைவரும், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும், 58 வயது வரைஉள்ளவர்களுக்கு பணி வழங்குவதால், அவர்களிடம் இருந்து போதிய அளவில்பணியை வாங்க முடியாத நிலைஏற்பட்டது.
சிலர் ஒரு மாதம், இரண்டு மாதம் மட்டும்அரசு பணியில் இருந்து விட்டு, பலவருடங்கள் பென்ஷன் பெறும் நிலைஏற்பட்டது. அதனால், அரசுக்கும்தேவையற்ற செலவு ஏற்பட்டது. இதைதவிர்க்கவே, 40 வயதுக்கு மேல்நியமனம் இல்லை என, முடிவுஎடுக்கப்பட்டு உள்ளதாக, கல்வி துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே, வருங்காலங்களில், வட்டாரகல்வி அதிகாரி, தொடக்க மற்றும்நடுநிலை பள்ளி தலைமைஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்விஆசிரியர் மற்றும் தொழிற்கல்விபயிற்றுனர் போன்ற பதவிகளுக்கு, 40 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டுமேநியமனம் செய்யப்பட உள்ளனர்.
CLICK HERE TO DOWNLOAD GAZETTE
0 Comments:
Post a Comment