நெசவு தொழில் நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வருகிற 31ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தரமணி நெசவு தொழில் நுட்ப பயிலகம் முதல்வர் அமராவதி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை தரமணியில் உள்ள நெசவு தொழில் நுட்பக்கல்லூரியில் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கான முதலாம் ஆண்டு டிப்ளமோ மாணவர் சேர்க்கை(2020-2021ம் ஆண்டுக்கான) நடைபெற்று கொண்டிருக்கிறது.
முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் காலியாக இருக்கும் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.இதற்கான விண்ண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 31ம் தேதி ஆகும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தரமணியில் உள்ள நெசவுத் தொழில் நுட்பப்பயிலகத்தில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment