இந்திய எண்ணெய் நிறுவனத்தில் ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் பணியாற்ற ஆசையா?


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.60 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, அல்லது பட்டப் படிப்பு முடித்து பணி அனுபவம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம் மேலாண்மை : மத்திய அரசு பணி : பிசியோதெரபிஸ்ட் கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, அல்லது பட்டப் படிப்பு முடித்து பணி அனுபவம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு : விண்ணப்பதாரர் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறையின் படி வயதில் தளர்வு அளிக்கப்படும். ஊதியம் : ரூ.50,000 முதல் ரூ.1,60,000 மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.oil-india.com என்ற இணையதளம் மூலம் 30.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : கணினி அடிப்படையிலான சோதனை (சிபிடி), குழு கலந்துரையாடல் (ஜிடி) / குழு பணி (ஜிடி) மற்றும் தனிப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை. இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.oil-india.com அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive