கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அமலில் இருக்கும் தொடர் ஊரடங்கினால், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை திறக்கப்படாததால்,
மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்காக இலவசமாக 10gp இணைய டேட்டா வழங்குவதாக வாட்ஸ் அப்பில் செய்திகள் பரவி வருகின்றன.
இந்த தகவல் உண்மை இல்லை என்று மத்திய அரசு மறுத்துள்ளது. மேலும் இதுபோன்று வரும் பொய் தகவல்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது
0 Comments:
Post a Comment