குரூப்-1 , குரூப் 2 ,குரூப் 2ஏ.. எந்தெந்த தேர்வுகளில் முறைகேடு? : எழுந்த பல புகார்களுக்கு விளக்க அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

குரூப்-1 , குரூப் 2 ,குரூப் 2ஏ.. எந்தெந்த தேர்வுகளில் முறைகேடு? : எழுந்த பல புகார்களுக்கு விளக்க அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள சில தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார்களுக்கு டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்துள்ளது.



Flash News : PTA - 3624 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அரசாணை வெளியீடு ( GO NO : 35 , DATE : 30.01.2020 - Primary And Upper Primary Temporary Teachers Appointment GO - Download

Flash News : PTA - 3624 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அரசாணை வெளியீடு ( GO NO : 35 , DATE : 30.01.2020 - Primary And Upper Primary Temporary Teachers Appointment GO - Download

PTA - Primary And Upper Primary  Temporary  Teachers Appointment GO - Download here

ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து தகுதியான நபர்களின் தெரிவுப் பட்டியல் பெறப்படும் வரை மாணவர்களின் நலன் கருதி அந்தந்த பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக மாதம் ரூ . 7 , 500 / - தொகுப்பூதியத்தில் பிப்ரவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் பார்வையில் காண் அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

மேலும் இப்பொருள் சார்ந்து கீழ்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது .

1 | தற்போது ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 3624 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பிப்ரவரி - 2020 முதல் ஏப்ரல் - 2020 முடிய மூன்று மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக மட்டும் அந்ததந்த ஊர்களில் அந்தந்த பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகாமையில் உள்ள பகுதியில் உள்ள தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் , பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களைக் கொண்ட குழு மூலமாக தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது . அவ்வாறு தெரிவு செய்யும் பொழுது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும் . இவ்வாறு தெரிவு செய்யும் நபர்களை இடைநிலை ஆசிரியர் பதவிக்கு மட்டுமே நிரப்பி கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது . இவ்வாறு தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக தெரிவு செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ . 7 , 500 / - வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும் .

நிபந்தனைகள்

ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதியும் அவர்களின் கல்விச் செயல்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது . ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக இடைநிலை ஆசிரியர் பணிக்காக தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு நிரப்பி கொள்ள வேண்டும் . இடைநிலை ஆசிரியர் கல்வித்தகுதி பெற்ற நபர்களை பார்வையில் காண் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள உறுப்பினர் கொண்ட குழுவின் மூலம் பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக எவ்வித புகார்களுக்கும் இடமின்றி நிரப்பி கொள்ள வேண்டும் .

 பிப்ரவரி - 2020 முதல் ஏப்ரல் - 2020 முடிய மூன்று மாதங்களுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்ப அரசாணையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் , அக்காலகட்டத்திற்குள் தொடர்புடைய பாடப்பகுதிகள் ( Portion ) அனைத்தும் அவ்வாசிரியரால் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதோடு இதனை சம்மந்தப்பட்ட பள்ளித்தலைமையாசிரியர் தொடர்ந்து கண்காணித்தல் வேண்டும் . மேலும் , இந்நடவடிக்கைகள் பள்ளிப் பார்வையின் போது தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர் , மாவட்டக் கல்வி அலவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களால் உறுதி செய்யப்பட வேண்டும் . மேற்கண்ட ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் அரசாணையின்படி தொடக்கக் கல்வி இயக்ககத்திலிருந்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படும் . முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கண்ட தொகையை பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழுவிற்கு உடன் விடுவிக்க வேண்டும் . இவ்வாறு பெறப்படும் நிதி தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும் .

மேலும் , இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்திற்கான ஒப்புகைச்சீட்டு சார்ந்த பள்ளித்தலைமையாசிரியரால் பராமரிக்கப்பட வேண்டும் . இது தணிக்கைக்கு உட்பட்டது ஆகையால் ஒப்புகைச் சீட்டு பள்ளித் தலைமையாசிரியரின் முழுக்கட்டுப்பாட்டில் இருத்தல் வேண்டும் . பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக அனுமதிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர்கள் 2019 - 2020 - ம் கல்வியாண்டின் கடைசி பள்ளி வேலை நாளன்று உடனடியாக பணிவிடுப்பு செய்யப்பட வேண்டும் . இவ்வாறாக பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் ஆணை வழங்கக்கூடாது . மேலும் , இவ்வாசிரியர்களின் பெயர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் அரசு ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்தல் கூடாது மற்றும் பணிச்சான்று எதுவும் வழங்குதல் கூடாது . இக்கடிதத்தில் தங்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கைக்கேற்ப இவ்வரசாணையின் அடிப்படையில் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் மூன்று மாதங்களுக்கு மட்டும் நிரப்பிக் கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .

இவ்வாறாக பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் விவரம் பள்ளி வாரியாக தொகுத்து இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .

School Calander - February - 2020

School Calander - February - 2020






தமிழ்நாடு அரசுவேலை - 15 பேராசிரியர்கள் பணியிடங்கள் அறிவிப்ப

தமிழ்நாடு அரசுவேலை - 15 பேராசிரியர்கள் பணியிடங்கள் அறிவிப்ப

Tamil Nadu Physical Education
and Sports University.

#Professor - 05.
#Assistant Professor - 05.
#Associate Professor - 05.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்

 www.tnpesu.org/

என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து  24/02/2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் .

தேர்வு நடைமுறை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .

கட்டணம் விவரங்கள் பொது / ஓ . பி . சி . விண்ண ப்பதாரர்களுக்கு விண்ண ப்பக் கட்டணம் - ரூ . 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ( எஸ் . டி . / எஸ் . சி . / பி . டபிள்யு . டி ) விண்ண ப்ப கட்டணம் ரூ . 250

மற்ற விபரங்கள் Department : Yoga , Advanced Sports Training and Coaching , Exercise Physiology and Nutrition , Sports Biomechanics and Kinesiology , Sports Technology

இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விபரம்(அனைத்து மாவட்டங்கள்)

இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விபரம்(அனைத்து மாவட்டங்கள்)

அனைத்து வகை இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் விவரம்
அரியலூர் - 47
கோயம்புத்தூர் - 56
கடலூர் - 102
தருமபுரி - 355
ஈரோடு - 108
காஞ்சிபுரம் -  123
கரூர் - 01
கிருஷ்ணகிரி - 830
நாகப்பட்டினம் - 06
நாமக்கல் - 49
புதுக்கோட்டை - 75
 சேலம் - 138
தஞ்சாவூர் - 44
 நீலகிரி - 25
திருப்பூர் - 168
திருவள்ளூர் - 82
திருவண்ணாமலை - 578
திருவாரூர் - 28
வேலூர் - 393
விழுப்புரம் - 416

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் பள்ளிகளில் பணிபுரிவதற்கான ஆசிரியருக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் !

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் பள்ளிகளில் பணிபுரிவதற்கான ஆசிரியருக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் !

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் பள்ளிகளில் பணிபுரிவதற்கான ஆசிரியருக்கு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை  (01.02.2020)அன்று காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இம்முகாம் ஆசிரியருக்காக மட்டும் சிறப்பு நிகழ்வாக நடைபெற உள்ளதால் ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், உடற்கல்வி ஆசிரியர் என ஆண்,பெண் இருபாலரும் தங்களது கல்விச்சான்றுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை, பல முன்னணி தனியார் பள்ளிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பல்வேறு ஆசிரியர் பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

 இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை அப்போதே வழங்கப்படும். இம்முகாமில் பணிநியமனம பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. 

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் பள்ளிகள் மற்றும் வேலை நாடும் மனுதாரர்கள் www.ncs.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம்.

 எனவே ஆசிரியர்கள் அதிகளவு கலந்துகொண்டு முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிக்கின்றனர்.

வெண்பூசணிச்சாற்றின் பயன்கள்

வெண்பூசணிச்சாற்றின் பயன்கள்

அரை கப் வெண்பூசணிச் சாற்றுடன் அரை கப் தண்ணீர் கலந்து தினமும் காலையில் பருகி வர கிடைக்கும் நன்மைகள்:
1. சோம்பலை நீக்கி புத்துணர்வை கொடுக்கும்.
2.மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.
3.வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும்.
4.உடல் உஷ்ணத்தை குறைக்கும்.




5.உடல் எடையை கட்டுப்படுத்துவதுடன் எடை அதிகரிப்பினால் ஏற்படும் கால் மூட்டுவலியைக் குறைக்கும்.
6. உடலில் அமிலத்தன்மையை சமன்படுத்த பெரிதும் உதவுகிறது.
7. வெண்பூசணிச்சாற்றுடன் சம அளவு தண்ணீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு மூன்று மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பது வயிற்றுப் புண்ணுக்குச் சிறந்த மருந்தென்றும் தொடர்ந்து பல நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் முழுமையாகக் குணமாகிவிடுமென்றும் குறிப்பிடுகின்றனர்.
8. மலச்சிக்கல் குறையும். குறிப்பாக நாடாப் புழுக்களுடன் இதரக் குடற்புழுக்களை வெளியேற்றும்.
9. கலோரி குறைந்த உணவென்பதால் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு எனப்படுகிறது. கழிவு நீக்கியாகச் செயலாற்றி சிறுநீர் வெளியேற்ற உதவுகிறது.
10. தூக்கமின்மைக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நீர்க்கோர்வை, இருமல், கபம் போன்றவற்றை நீக்கும்.




11. திருஷ்டி தோஷங்கள், மருந்தீடுகள், கிரக பீடைகள் விலகும்.
12. மூளையைச் சுறுசுறுப்பாக வைக்கும். இரத்த விருத்தியைத் தரும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

மூன்றே நிமிடத்தில் முட்டியை வலுப்படுத்தும் முட்டை கோஸ் இலை..!

மூன்றே நிமிடத்தில் முட்டியை வலுப்படுத்தும் முட்டை கோஸ் இலை..!

முட்டைக்கோஸ் பல நூற்றாண்டாக மூட்டு வலியை சரிசெய்யும் நிவாரணியாக செயல்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் இதில் உள்ள வைட்டமின், பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள்,க்ளூட்டமைன், ஆந்தோசையனின்கள் ஆகியவை தான் காரணம்.
காய்கறிகளில் மிகவும் உட்டச்சத்து மிகுந்த காய்கறி முட்டைகோஸ்.
இதில் வைட்டமின் சி, கே மற்றும் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது.
அதோடு இதில் புற்றுநோயை எதிர்க்கும் பொருட்களும், அலற்ஜி நிவாரணியாக மூட்டு வலியை குறைக்கு வலியுள்ள பகுதியில் சுற்று கட்டினால் வலி பறந்து போய்விடும். இதற்கான செயல்முறையை பார்க்கலாம்.




தேவையான பொருட்கள்:-

முட்டைக்கோஸ்
அலுமினிய தகடு
பூரிக்கட்டை
பேண்டேஜ்
ஓவன்
முட்டை கோஸ் இலையை நன்கு கழுவி, உலர வைத்து அதை சாறு வெளியேறும் வரை பூரி கட்டையால் தேய்க்க வேண்டும்.
பின்னர் முட்டைக் கோஸை அலுமினியத் தட்டில் விரித்து. ஓவனில் சில நிமிடம் வெதுவெதுப்பாக சூடேற்ற வேண்டும். பின் வலியுள்ள இடத்தில் வைத்து பேண்டேஜின் உதவியால் கட்ட வேண்டும்.




இப்படி 1 மணி நேரம் கட்டி வைத்த பின் கழற்ற வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை இது போன்று புதிய முட்டைக் கோஸ் இலைகளை வைத்து செய்துவந்தால் நல்ல மாற்றம் காணலாம்.

சிகப்பு முட்டைக்கோஸ்:-
பச்சை முட்டைக்கோஸை விட, சிவப்பு முட்டைக்கோஸில் ஆந்தோசையனின்கள் சத்து அதிக அளவில் உள்ளது. எனவே இந்த வகை முட்டைக்கோஸ் கிடைத்தால் பயன்படுத்துங்கள்.

சீம்பால் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

சீம்பால் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

எப்பவும் கிடைக்காது ஆனா கிடைக்கும் போது பயன்படுத்தி கொள்ளவும்
கடும்புப்பால் என்றும் அழைக்கப்படும் சீம்பால் (colostrum) என்பது பாலூட்டி விலங்குகளில் கன்று ஈனுவதற்கு சற்று முன்னரும் பின்னரும் தாயின் முலைகளில் சுரக்கும் பாலைக் குறிக்கும் சொல்லாகும். இச்சொல் பொதுவாக மாட்டினங்களின் இத்தகைய பாலைக் குறிக்கவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.




சீம்பால் மனிதர்களிலும், மாடுகளிலும் மஞ்சள் நிறம் அல்லது வெளிர் மஞ்சள் நிறம் கொண்டிருக்கும். இது கூடுதலான அளவு மாவுச் சத்து, புரதம், நோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்புச் சத்து ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக, இதை உட்கொள்ளும் கன்றுகள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க ஏதுவாகிறது. அதே நேரம், முழுமையாக வளர்ச்சியடையாத கன்றின் செரிமான முறைமை வலு குன்றியிருக்குமென்பதால் ஓரளவு வயிற்றுப்போக்கு ஏற்படவும் இது காரணமாகிறது. இவ்வயிற்றுப்போக்கும் ஒருவகையில் குழந்தையின் உடலில் தங்கியுள்ள (இறந்துபட்ட இரத்த சிவப்பணுக்களை உடைப்பதால் உருவாகும்) பைலிருபின் போன்ற வீண்பொருட்கள் வெளியேற உதவுகிறது. இதன் மூலம் மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.




மேலும், இதிலுள்ள நோய் எதிர்ப்பு புரதப்பொருட்கள் கன்றின் தொண்டை, நுரையீரல் மற்றும் குடல்களைப் பாதுகாக்கின்றன. சில நன்மை பயக்கும் கோலுரு நுண்ணுயிர்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது.
இதன் நோய் எதிர்ப்புப் பண்பின் காரணமாக, பசுவின் சீம்பாலை சமைத்து உட்கொள்கின்றனர். தமிழ்நாட்டிலும் பிற பகுதிகளிலும் ஏலக்காய், கருப்பட்டி அல்லது வெல்லம் போன்றவற்றைச் சேர்த்து கொதிக்கவைத்து உட்கொள்வதும், இட்லி செய்வதுபோல ஆவியில் வேகவைத்து உட்கொள்வதும் பொதுவானது.

உலர் அத்தி பழத்தின் நன்மைகள்

உலர் அத்தி பழத்தின் நன்மைகள்

அத்திப்பழத்தினை உலரவைத்து, ஒரு வட்டமான வடிவில், வைக்கோலில் கோர்க்கப்பட்டு, சில கடைகளில் விற்கப்படும். சிலருக்கு இது உலர் அத்திப்பழம் என்றும், இந்த பழத்தை சாப்பிடுவார்கள் என்பது கூட தெரியாமல் இருக்கும். ஏனென்றால் இதனுடைய சுவையும், பயனும் அறியாத காரணத்தால் தான். உலர் அத்திப்பழத்தின் பயனை தெரிந்து கொண்டால் இதை வாங்கி உண்ண வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் வந்துவிடும். இதன் விலை சற்று அதிகமாக தான் இருக்கும். பலன்களும் அதிகமாக தரும். நாட்டுமருந்து கடை அல்லது டிரைஃபுட் பொருட்கள் விற்கும் கடையில் இது கிடைக்கும். இந்த உலர் அத்திப்பழத்தின் பயனை பற்றி பார்ப்போமா.




அத்திப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் இ, கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால் இந்த பழத்தை நாம் அடிக்கடி சாப்பிடலாம். இது நம் உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு ஆரோக்கியத்தையும் தருகிறது. தினமும் 1 அல்லது 2 அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் ஏற்படும் பயன்கள்.
இதயத்திற்கு
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நம் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதன் மூலம் இதயத்தின் ரத்த ஓட்டம் சீராக்கப் படுகிறது. ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைப்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படும். இதயம் ஆரோக்கியமாகும். இதற்கு தினமும் ஒன்று அல்லது இரண்டு அத்திப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.




புற்றுநோயை தடுக்கும்
புற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் இந்த அத்திப்பழத்தில் உள்ளதால் நம் உடலானது புற்றுநோயை உண்டாக்கும் செல்லகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. நம் உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
எலும்புகள் வலுவாக
தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள எலும்புகள் பலப்படுத்துகிறது. ஒரு அத்திப்பழத்தில் 3% கால்சியம் உள்ளது.நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் அளவை இந்த ஒரு அத்திப் பழமே கொடுத்து விடுகிறது. இதனால் எலும்பு தேய்மானம் ஏற்படாமல் மூட்டு வலி வராமல் தடுக்கலாம்.

வெந்தயத்தில் டீ தினமும் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

வெந்தயத்தில் டீ தினமும் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது.
அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.




*வெந்தய டீ தயாரிப்பது எப்படி?*
*ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.*
பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.
இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.
நன்மை 1*
மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
*நன்மை 2*
பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.




*நன்மை 3*
ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.
*நன்மை 4*
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்
*நன்மை 5*
வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.




நன்மை 6*
வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
*நன்மை 7*
குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.
*நன்மை 8*
உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.
*நன்மை 9*
வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.




*நன்மை 10*
பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.
*நன்மை 11*
ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.
*நன்மை 12*
வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.
*நன்மை 13*
வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.




*நன்மை 14*
வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
*நன்மை 15*
வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.
*நன்மை 16*
காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.
*நன்மை 17*
வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.




*நன்மை 18*
வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.
*நன்மை 19*
வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.
*நன்மை 20*
வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.

Madras University results declared for UG/PG November 2019 exam @ unom.ac.in

Madras University results declared for UG/PG November 2019 exam @ unom.ac.in
Madras University on Friday declared the results of UG / PG / Professional degree November examination on its official website.

The candidates who have appeared for the Madras University UG and PG examinations can visit the official website of Madras University — unom.ac.in - to check and download the results.

Madras University has declared the results of the examinations which were held in November 2019. Candidates need to enter their Madras University hall ticket number to obtain the results.

குரூப்-1 , குரூப் 2 ,குரூப் 2ஏ.. எந்தெந்த தேர்வுகளில் முறைகேடு? : எழுந்த பல புகார்களுக்கு விளக்க அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

குரூப்-1 , குரூப் 2 ,குரூப் 2ஏ.. எந்தெந்த தேர்வுகளில் முறைகேடு? : எழுந்த பல புகார்களுக்கு விளக்க அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்!
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால்நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள சில தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார்களுக்கு டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்துள்ளது.


தேர்தல் பணி செய்த அலுவலர்களுக்கு, மதிப்பூதியம் வழங்க, 48.94 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தேர்தல் பணி செய்த அலுவலர்களுக்கு, மதிப்பூதியம் வழங்க, 48.94 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலில், தேர்தல் பணி செய்த அலுவலர்களுக்கு, மதிப்பூதியம் வழங்க, 48.94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 27 மாவட்டங்களில் மட்டும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

தேர்தல் பணி செய்வர்களுக்கு, மதிப்பூதியம் வழங்க, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், பார்வையாளர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், தாசில்தார்கள் போன்றோருக்கு, ஒரு மாத அடிப்படை சம்பளம்,அதிகபட்சமாக, 33 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.பறககும் படை, வீடியோ கண்காணிப்பு படை, தேர்தல் நடத்தை விதிகள் கண்காணிப்பு குழு, உதவி செலவினப் பார்வையாளர், நிலைக் குழு ஆகியவற்றில் பணி செய்தவர்களுக்கு, ஒரு மாத அடிப்படை சம்பளம், அதிகபட்சம், 24 ஆயிரத்து, 500 ரூபாய்.கலெக்டர்களின் நேர்முக உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராமஉதவியாளர்கள் போன்றோருக்கு, ஒரு மாத அடிப்படை சம்பளத்தில், 50 சதவீதம், அதிகபட்சம், 17 ஆயிரம் ரூபாய்வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.பிரிவு எழுத்தர்களுக்கு, 5,000 ரூபாய்; வாக்காளர் அட்டை செயல்பாட்டாளர்கள், தேர்தல் தகவல் செயல்பாட்டாளர்கள் ஆகியோருக்கு, 7,000 ரூபாய் வழங்க உத்தரவடப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருக்கும், மதிப்பூதியம் வழங்குவதற்காக, 48.94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள், நிதியை பெற்று, தேர்தல் பணி செய்தவர்களுக்கு வழங்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆசியர்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு? மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்பு

ஆசியர்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு? மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்பு

ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரத்தை, மதரசா பணியாளர் தேர்வாணையத்திற்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

மேற்குவங்கத்தில், மதரசா எனப்படும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களில், ஆசிரியர்களை நியமிக்க, 2008ம் ஆண்டில்,மாநில அரசால், மதரசா பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனுக்கு எதிராக, மதரசா பள்ளிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, கோல்கட்டா உயர் நீதிமன்றம்,'2008ம் ஆண்டின், மதரசா பணியாளர் தேர்வாணைய சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது'என, 2015ல் தீர்ப்பளித்தது.இதையடுத்து, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தேர்வாணையத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சிலர், உச்ச நீதிமன்றத்தில், முறையிட்டனர். அந்த மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்றம், ஆசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கும்வரை, ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கக்கூடாது என, உத்தரவு பிறப்பித்தது.இந்த வழக்கில், ஜனவரி, 6ம் தேதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

கோல்கட்டா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், 2008ம் ஆண்டின்மதரசா பணியாளர் தேர்வாணைய சட்டம், அரசியலமைப்புக்கு உட்பட்டது என்றும், அதன்படி செய்யப்பட்ட ஆசிரியர்கள் நியமனங்கள் செல்லும் என்றும் தீர்ப்பளித்தது.இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மதரசா கல்வி நிறுவனமான 'கோண்டாய் ரஹமானியா ஹை மதரசா' நிறுவனம்,நேற்று மேல்முறையீடு செய்தது.

அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள், பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் அடங்கிய அமர்வு, மேற்கு வங்க மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும், பதிலளிக்குமாறு, 'நோட்டீஸ்' அனுப்பியது.

கருணை அடிப்படையில் அரசு பணி புதிய விதிமுறைகள் வெளியீடு!!

கருணை அடிப்படையில் அரசு பணி புதிய விதிமுறைகள் வெளியீடு!!


கருணை அடிப்படையில், அரசு பணி வழங்குவதற்கான விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், அரசு பணியில் இருப்போர், பணியின் போது இறந்தால், கருணை அடிப்படையில், அவர்களின் வாரிசுகளுக்கு, அவர்களது கல்வி தகுதிக்கேற்ப, அரசு பணி வழங்கப்படுகிறது. இத்திட்டம், 1972ல் துவக்கப்பட்டது. இதற்கான விதிமுறைகள் அவ்வப்போது மாற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதற்கான விதிமுறைகளையும், தற்போதுள்ள சூழ்நிலைகளையும் முழுமையாக ஆய்வு செய்து, புதிய விதிமுறைகளை உருவாக்கும்படி, தமிழக அரசின் தலைமை செயலருக்கு உத்தரவிட்டது.


அதேபோல, சென்னை உயர்நீதிமன்றமும், பொது நல வழக்குகளில், சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அவற்றின் அடிப்படையில், தமிழக அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

அதன்படி, அரசு ஊழியர்கள் பணியின் போது இறந்தாலோ, உடல் நலக்குறைவு காரணமாக பணியாற்ற முடியாமல், 53 வயதிற்குள் ஓய்வு பெற்றாலோ, அவர்களின் வாரிசுதாரர்களுக்கு, அரசு பணி வழங்கலாம்.ஒப்பந்த பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்களுக்கு, இந்த விதிமுறைகள் பொருந்தாது. குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு விதிமுறைகளை, அரசு வெளியிட்டுள்ளது.

பொதுத் தேர்வுகளை முன்னிட்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சி: சிபிஎஸ்இ.

பொதுத் தேர்வுகளை முன்னிட்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சி: சிபிஎஸ்இ.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவதை முன்னிட்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகின்றன. 10-ம் வகுப்புக்கு மார்ச் 20-ம் தேதி வரையும் 12-ம் வகுப்புக்கு மார்ச் 30 வரையும் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 7-ம் தேதி வரை இவை நடைபெறும்.


இந்நிலையில் பொதுத் தேர்வுகளை சீரிய முறையில் நடத்த, பள்ளி முதல்வர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புத்தாக்கப் பயிற்சிகளை சிபிஎஸ்இ வழங்கியது.

முறையாக தேர்வுகளை நடத்தி, சரியான நேரத்தில், தவறுகள் இல்லாத வகையில் தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர், துணை முதல்வர், போதிய தேர்வுத் துறை அனுபவம் வாய்ந்த மூத்த ஆசிரியர்களுக்கு இந்த சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக 13,379 பேருக்கு 77 பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டன.

இதற்கிடையே தேர்வு நடைபெறும் தினங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவற்றின் மூலம் பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளி நிர்வாகம் குழப்பத்துக்கு ஆளாக வேண்டாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

வேறு பள்ளி ஆசிரியர்களே கண்காணிப்பாளரிக நியமிக்கப்படுவார், டம்மி சீட்டுமுறையும் அமல்? 5 & 8 பொதுத்தேர்வில் புதிய தகவல்!!

வேறு பள்ளி ஆசிரியர்களே கண்காணிப்பாளரிக நியமிக்கப்படுவார், டம்மி சீட்டுமுறையும் அமல்? 5 & 8 பொதுத்தேர்வில் புதிய தகவல்!!

நடப்பாண்டில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை அந்தந்த பள் வியிலேயே எழுதலாம் என்று அமைச்சர் தெரி வித்தாலும் , தேர்வுக்கு வேறு பள்ளி ஆசிரியர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர் .

மேலும் டம்மி ஷீட் ' கிழிக்கும் நடைமுறையும் அமல் படுத்தப்படுகிறது . தமிழகத்தில் 5 மற்றும் * 8ம் வகுப்பு மாணவர்கள் , நடப்பாண்டில் முப்பருவக் கல்வி முறையில் பயின்று வருகின்றனர் . இவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு என்பது கட்டாயமாகியுள்ளது . அதனால் , மூன்று பருவ பாடங்களையும் மொத்தமாக படிக்கவேண்டிய
கட்டாயத்துக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அறிவிப்பு வெளியான மறுநாளே , " மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதத் தேவையில்லை . அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம் ' ' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை யன் கூறினர் . அடுத்ததாக , அதே பள்ளியில் தேர்வு எழுதினாலும் , தேர்வு அறை கண்காணிப் பாளராக வேறு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது .

இதுகுறித்து பொதுத்தேர்வு பணிக்கான குழுவில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது : . தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்க ளுக்கு அரசு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் , பொதுத் தேர்வு தொடர்பாக அடிக்கடி தொடக்கக்கல்வி இயக்குனரகம் ஒரு அறிவிப்பு வெளியிட அதற்கு அமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார் .

பத்தாம் வகுப்பு , பிளஸ் 2 பொதுத்தேர்வு போன்றே 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வையும் நட த்த அரசு திட்டமிட்டுள்ளது . குறிப்பாக , வேறு பள்ளிக்குச் சென்று மாணவர்கள் தேர்வு எழுதவேண்டாம் என்றாலும் , தேர்வு அறை கண்காணிப்பாளராக வேறு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் . அதுவும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்

ஒவ்வொரு தேர்வுக்கும் ஆசிரியர்கள் மாறுவார்கள் . மேலும் , மாணவர்களுக்கு தரப்படும் விடைத்தாளின் முதல் பக்கம் ' டம்மி ஷீட் ' எனப்படும் . அதில் மாணவரின் பெயர் , சீரியல் எண் உள்ளிட்ட விவரங்கள் எழுதவேண்டும் . தேர்வு எழுதி முடித்ததும் , முதல் பக்கமான டம்மி ஷீட்டை தேர்வு அறை கண்காணிப் பாளர் கிழித்து எடுத்துக் கொண்டு , விடைத்தாளை திருத்துவதற்காக அனுப்பி வைப்பார் .

ஏனெனில் , சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியரே குறிப்பிட்ட மாண வரின் விடைத்தாளை திருத்தினாலும் , அது யாருடையது என்பது அவருக்கு தெரியாது . இந்த நடைமுறை , 10 மற்றும் பிளஸ் ' 2 பொதுத்தேர்வுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது . இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர் .

கொரனோ வைரஸ் பீதியும்,தீர்வும்

கொரனோ வைரஸ் பீதியும்,தீர்வும்
-அக்குஹீலர் சே.அருண் குமார்
2002 நவம்பர் மாதத்தில் ஹாங்காங்கில் கண்டறியப்பட்டு உலகெங்கும் பீதியை கிளப்பிய சார்ஸ் நோய் பற்றி நினைவிருக்கிறதா? 
அந்த நேரத்தில் ரஷ்ய அறிவியலாளர் செர்ஜி கோலெஸ்னிகோவ் "சார்ஸ் சதித்திட்ட கோட்பாடு " ஒன்றை அறிவித்தார். சார்ஸ் வைரஸ் இயற்கையாக உருவாக வகையில்லை என்றும் தட்டம்மை மற்றும் பொன்னுக்கு வீங்கி வைரஸ்களின் செயற்கை முறை கூட்டிணைவே சார்ஸ் வைரஸ் என்றும் ஆய்வறிக்கை வெளியிட்டார். இது ஓர் ஆய்வகத்தில்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என வாதிட்டார். இதனடிப்படையில் இந்த வைரஸை ஐக்கிய அமெரிக்கா, வளர்ந்து வரும் சீனாவின் பொருளாதாரத்தை பாதிப்படையத் தொடர்ந்த உயிரியல் போராக சீனாவின் அன்றைய இணையதள உரையாடல்களில் முதன்மை பெற்றது.இது ஒருபுறம் இருக்கட்டும்.




இன்றளவில் இந்த நோய் முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஜுலை 2003க்குப் பிறகு எந்த மனிதருக்கும் இந்நோய் ஏற்படவில்லை. இருப்பினும், பெரியம்மை போல இந்நோய் முற்றிலும் அழிக்கப்பட்டதாகக் கூற இயலாது (அதாவது அழிக்கப்படுவதற்கு முன்பே தானாக அழிந்து விட்டது அல்லது பதுங்கி விட்டது) என உலக சுகாதார நிறுவனம் கூறிவந்த நிலையில் இப்போது "கொரனோ வைரஸ்" பற்றிய பீதி பரப்பிவிடப்பட்டுள்ளது.
சார்ஸ் வைரஸூம், தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள கொரனோ வைரஸூம் மனிதர்களுக்கு ஒரே மாதிரியான உடல் தொந்தரவை ஏற்படுத்துபவை அதாவது சளி, காய்ச்சல், மூச்சு திணறல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாக சொல்லப்படுகின்றன.




முதன்முதலாக 1960களில் மனிதர்களின் சைனஸ் பகுதியில் இருந்த சளியில் கொரனோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸிற்கு Human coronavirus 229E, மற்றும் oc43 என பெயரிடப்பட்டது. இந்த குடும்பத்தைச் சார்ந்த வைரஸ்கள் 2003 இல் SARS-CoV எனவும் 2004 இல் HCoV NL63 எனவும் 2005 இல் HKU1எனவும், 2012 இல் MERS-CoV என கண்டறியப்பட்டது. 
தற்போது 31 டிசம்பர் 2019 அன்று, உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 2019-nCoV என்ற கொரனோ வைரசின் ஒரு புதிய வடிவம் சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.1960களில் கண்டறியப்பட்ட இந்த கொரனோ வைரஸ் வகையறாகளுக்கு, நவீன மருத்துவத்தில் மனிதர்கள் பயன்படுத்த பாதுகாப்பான சிகிச்சையோ பாதுகாப்பு தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. நோய்க்கான சிகிச்சை முறை மற்றும் தடுப்பூசி மருந்துகளை கண்டறிய உலகெங்கிலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.




நவீன மருத்துவத்தில் சிகிச்சை/பாதுகாப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் நாம் என்ன செய்யலாம்?
கொரனோ வைரஸ் பாதிப்பு மட்டுமல்ல எதிர் காலத்தில் வரும் எந்தவித பாதிப்பையும் எதிர்கொள்ளும் ஆற்றலை பெறும் வழிகளை ஐந்தாயிரம் ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் "அக்குபங்சர் மருத்துவம்" வாயிலாக அறிந்து கொள்வோம்.




அக்குபங்சர் என்பது சிகிச்சை முறை மட்டுமல்ல வாழ்வியல் முறை என எங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் சொல்லி வருகிறோம்.
உடலில் தொந்தரவுகள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்டால் அதிலிருந்து மீளவும் அடிப்படை "நோய் எதிர்ப்பாற்றல்" என்பதை யாராலும் மறுக்க இயலாது. எனவே நோய் எதிர்ப்பாற்றலை முழு வீரியத்துடன் வைத்துக் கொள்வதன் மூலம் நோய் வரும் முன்பே தடுத்துக் கொள்ள முடியும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? மிக எளிதான விஷயம்தான்!




உங்கள் உடலின் அறிவிப்புகளுக்கு மதிப்பளித்தல்
1. பசித்தால் மட்டுமே உணவு!
2. தாகம்!
3. தூக்கம்!
4. இரசாயன மருந்து, உணவு, பான பொருட்களை தவிர்த்தல்!
5.மனக்குழப்பம் இன்றி இருத்தல்
சரி, இதை பின்பற்றாததால் இப்போது உடலில்தொந்தரவு வந்துவிட்டது என்ன செய்யலாம்?
மேற்கூறிய வாழ்வியல் முறைகளை கடைபிடித்து, உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் ந(ப)லமடையும்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்.21 முதல் கோடை விடுமுறை!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்.21 முதல் கோடை விடுமுறை!
துவக்க , நடுநிலை , உயர் நிலை பள்ளிகளுக்கு ஏப் . , 21 முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது .

அரசு துவக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் , ஒன்று முதல் ஒன் பதாம் வகுப்பு வரையிலான மாணவ , மாணவிகளுக்கு , ஏப்.9ல் முழு ஆண்டு தேர்வு துவங்குகிறது . ஏப்.20ல் தேர்வு முடிவடைகிறது . ஏப்.21 முதல் கோடை விடுமுறை விடப்படும் . ஆசிரியர்கள் ஏப்.30 வரை பள்ளிக்கு வர வேண்டும் . மே மாத இறுதியில் , பள்ளி வகுப்பறை , பள்ளி வளாகம் துாய்மையாக இருப்பதை , ஆசிரியர்கள் உறுதிப்படுத்தி செல்லவும் , பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.




Group 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு பதிலாக புதிதாக 39 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்...

Group 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு பதிலாக புதிதாக 39 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்...

Group 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு பதிலாக புதிதாக 39 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


நாளை ( 01.02.2020 ) சனிக்கிழமை எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி முழு வேலைநாள்?

நாளை ( 01.02.2020 ) சனிக்கிழமை எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி முழு வேலைநாள்?
நாளை ( 01.02.2020 ) சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாக செயல்படும் என அனைத்து அரசு அரசு உதவி பெறும் சுயநிதி தொடக்க , நடுநிலை , உயர்நிலை / மேல்நிலை மெட்ரிக் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

1) திருவாரூர்

2) நாகப்பட்டினம்

3) வேலூர்

Flash News : 3,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Flash News : 3,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு



தமிழக முதல்வர் உத்தரவுப்படி அரசு தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் 3,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ஊதியமாக ₹7,500/ வழங்கப்படும்.
அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

Flash News : TN EMIS Attendance App - Update New Version

Flash News : TN EMIS Attendance App - Update New Version

பட்டாம்பூச்சி முதுகில் பாறாங்கல் சுமையா? - முனைவர் மணி கணேசன்

பட்டாம்பூச்சி முதுகில் பாறாங்கல் சுமையா? - முனைவர் மணி கணேசன்

ஆட்டைக் கடித்து மாட்டைப் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக இருக்கிறது 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவில் ஒரு பகுதியாக ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு அவசியம் எனும் பரிந்துரை ஆகும். இன்றளவும் அவ்வரைவு சட்டமாக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 

இந்நிலையில் இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் மத்தியில் ஆளும் கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் கூட மாநில அரசியல் நிலவரங்களையும் மக்களின் மனநிலையையும் கருத்தில் கொண்டு மெல்ல வேறுவழியின்றி நிறைவேற்ற முன்வருவது கண்கூடு. அதேவேளையில் தமிழக அரசு முந்திக்கொண்டு முதலாவதாக எதைப்பற்றியும் யோசிக்காமல் பொதுமக்கள், அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் விரோத தீங்கு விளைவிக்கும் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றத் துடிப்பதென்பது புரியாத புதிர் ஆகும்.

அந்த வகையில் பொதுமக்களின் வாழ்வாதாரங்களைப் பெரிதும் பாதிக்கும் எட்டுவழிச் சாலை, ஹைட்ரோ கார்பன் முதலான திட்டங்களும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை உரிமையாக காலங்காலமாக இருந்துவந்த ஓய்வூதியம் சார்ந்த நடைமுறைகளைக் குழிதோண்டி புதைத்து பங்களிப்பு ஓய்வூதியம் எனும் வயோதிக காலத்தில் ஒன்றுக்கும் உதவாத திட்டத்தை மத்திய அரசு ஏப்ரல் 2004 இல் அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே 2003 இல் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது காலக் கொடுமை எனலாம். 

இத்தகு அசாதாரண சூழலில் குழந்தைகள் மீதான வன்முறைகளுள் தலையாயதாக விளங்குவன தேர்வு நடைமுறைகளே! தேர்வுகள் தேவையில்லை என்பது குழந்தை உளவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரின் இன்றியமையாதக் கருத்தாகும். தேர்வுகள் குழந்தைகளின் உளவியலைப் பெரிதும் பாதிக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. தேர்வுகள் அனைத்தும் கற்றல் அடைவுத் திறனையும் திறனறிவையும் முழுமையாக மதிப்பீடு செய்ய முன்வருவதில்லை. மாறாக, நினைவாற்றலையும் பாடப்புத்தகங்களில் காணப்படும் விடைகளை அப்படியே நகலெடுத்து எழுதும் எழுத்தாற்றலையும் சோதித்து அறிவதையே தலையாய வேலையாகக் கொண்டுள்ளது வேதனைக்குரியது. 

மதிப்பெண்களால் மட்டுமே மாணவர்கள் அறியப்படுகின்றனர். தனித்திறன்களுக்கும் திறமைகளுக்கும் வேலையில்லை. குறிப்பாக, நடைமுறையில் உள்ள 10 முதல் 12 வகுப்பு முடிய உள்ள மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பலர் கூக்குரல் கொடுத்து வருவது அறிந்ததே. கற்றல் குறைபாடுகள் மிக்க மாணவர்களின் நலனை முற்றிலும் புறந்தள்ளி நல்ல உடல்நலம் மற்றும் மனநலம் படைத்த ஏனைய மாணவர்களுடன் பொதுத்தேர்வு நடைமுறைகளைத் தொன்றுதொட்டு திணித்து வருவதென்பது பல்வேறு எதிர்வினைகளைத் தோற்றுவிக்கிறது. 

இந்நிலையில் அண்மையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு என்னும் பேரிடி குழந்தைகளின் எதிர்காலத்தை வெகுவாகப் பாதிக்கக்கூடிய ஒன்றாகும். உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் முதலானோர் அறவழியில் காட்டும் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் கவலைகள் குறித்து நடுவுநிலையுடன் சிந்திக்காமல் முன்வைத்த காலைப் பின்வைக்க மனமில்லாமல் முரட்டுத்தனமாகச் செயல்படுவதென்பது அரசுக்கு நல்லதல்ல. 

குறும்புத்தனங்களும் குழந்தைப் பண்புகளும் ஒருங்கே நிறைந்த பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள் ஒன்றும் பரிசோதனைக் கூட எலிகளல்லர். உடலளவிலும் மனதளவிலும் பள்ளியளவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர்வுகளுக்குத் தம்மைத் திறம்பட தயாரித்துக் கொள்ள இயலாதக் குழந்தைகளைப் பொதுத்தேர்வு எனும் பாறையைப் சுமையாக்குவது தகாத செயலாகும். ஆயிரம் சமாதானம் அரசிடமிருந்து கூறப்பட்டாலும் குழந்தைகளுக்குப் பொதுத்தேர்வு முடிவென்பது குழந்தைமையை முற்றாக அழித்தொழிக்கும் கொடுஞ்செயல் என்பது உண்மை. அரசுக்கு வருவாயைப் பெருக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட அரசு மதுபானக் கடைகளால் குடி நோயாளிகளின் எண்ணிக்கை மிகுந்தது போல் பொதுத்தேர்வு முறையால் பள்ளி இடைநிற்றல் மிகுதியாகும் அவலம் தமிழ்ச் சூழலில் மிகும். இதனால் குழந்தைகள், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிக் கல்வியைக் தொடர முடியாமல் படிப்பை வெறுத்தொதுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும். ஏனெனில், படிப்பில் தோல்வி என்பது மாணவனை வெகுவாகப் பாதிக்கும். தோல்விக்குப் பின், மீளப் பள்ளி வருவதையும் அவனைக் காட்டிலும் வயது குறைந்த மாணவனுடன் மற்றுமொரு முறை கல்விப் பயணம் மேற்கொள்வதையும் விரும்பாமல் பல்வேறு உளவியல் சிக்கல்களுடன் விரும்பத்தகாத செயல்களை நாடி ஓடும் அவலநிலைக்குக் குழந்தைகள் ஆட்படுவது நிகழக் கூடும்.

குறிப்பாக, தமிழகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளும் ஓராசிரியர்கள் மற்றும் ஓரிரு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வரும் பரிதாபப் பள்ளிகளும் நிரம்ப உள்ளன. குக்கிராமங்களில் காணப்படும் பல்வேறு அரசுப் பள்ளிகளில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பைக் கடக்கும் முதல் தலைமுறை மாணாக்கர்கள் பாமரப் பெற்றோர் துணையும் ஆதரவுமின்றித் தம் பள்ளிக்கல்வியை முயன்று தவறித் தொடரும் போக்குகள் இன்றும் மலிந்து காணக் கிடைக்கின்றன. பெரும்பாலான அரசுப் பள்ளிகள் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் விளிம்புநிலையினர், பட்டியல் இனத்தவர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைக் குழந்தைகள், ஒற்றைப் பெற்றோருடன் வசிக்கும் பிள்ளைகள், அநாதைகள் குழந்தைகள் போன்றோரின் புகலிடமாக இப்போதும் இருந்து வருவது கண்கூடு. இத்தகையோர் தொடக்கக்கல்வியைத் தொய்வின்றித் தொடர்ந்து நிறைவு செய்திட வேண்டும் என்று கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முழங்குவதன் குரல்வளையை நெரிப்பது ஆகாதா கட்டாய இப்பொதுத்தேர்வு அறிவிப்பு? 

பின்லாந்து உள்ளிட்ட கல்வியில் தலைசிறந்து விளங்கும் நாடுகளில் காணப்படும் கல்விமுறைகளை வியந்து போற்றினால் மட்டும் போதாது. கல்வியிற் சிறந்த ஒளிரும் தமிழகத்தை இருண்ட காலத்திற்கு இதுபோன்ற குழந்தைகள் விரோத பொதுத்தேர்வு அறிவிக்கைகள் அழைத்துச் செல்வது உறுதி. மாணவர்களின் அறிவு வளர்ச்சி பிறப்பு தொட்டு ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவ்வப்போது வேறுபடும். தொடக்க நிலையில் சுமாராகப் படித்த பல குழந்தைகள் உயர்நிலை வகுப்பில் சிறப்பிடம் பெற்றதும் உயர் தொடக்க நிலையில் அதிக கவனம் தேவைப்படும் நிலையிலிருந்த பள்ளிப் பிள்ளைகள் மேனிலைக் கல்வியில் முதன்மை அடைந்ததும் அறியக் கிடைப்பதாகும். குறிப்பாக, ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுறும் பெண் குழந்தைகள் மீளப் பள்ளி வருவதென்பதும் விட்டப் படிப்பைத் தொடருவதென்பதும் இயலாதது. 

எதிர்ப்புக் குரல்களை எதிரிகளின் குரல்களாக நோக்கும் குறுகிய பார்வையினை முதலில் ஆட்சியாளர்கள் கைவிடுதல் நல்லது. மனித வளம் எப்போதும் மகத்தானது. தமிழ்ச் சமூகம் தொன்றுதொட்டு அறிவார்ந்த முறையில் வாழ்ந்து வரும் உயரிய உன்னத சமூகமாகும். வழக்கொழிந்து போன குருகுலக்கல்விக்குப் புத்துயிர் ஊட்டவே இது போன்ற அபத்த அறிவிப்புகள் அடிகோலும்!  எதிர்வரும் காலங்களில் பணம் படைத்த, ஏட்டுக் கல்வியில் வெறும் தேர்ச்சி பெற்ற, சுய சிந்தனைகளுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட, தேர்வுகளுக்கு மட்டுமே தயாரிக்கப்பட்ட பொன்சாய்க் குழந்தைகள் பள்ளிகளில் பல்கிப் பெருகுவது வளமான தமிழகத்திற்கும் வலிமையான வல்லரசு இந்திய நாட்டிற்கும் நல்லதல்ல. குழந்தைகளை இயல்பாக வாழவும் வளரவும் விடுவது ஒவ்வொருவரின் கடமையாகும். அறிவுக் கண்ணைத் திறக்க கல்வி அவசியம். மதிப்பெண்களை விட மாணவர்களுக்கு மதிப்புமிகு எண்ணங்களே அவர்களுடைய நல்வாழ்க்கைக்கு அடிப்படை. பிஞ்சுக் குழந்தைகள் எதிர்பார்ப்பது பாதுகாப்பான நல்வாழ்வு. பட்டாம்பூச்சி முதுகில் பாறாங்கல் சுமையாக விளங்கும் பொதுத் தேர்வல்ல! குழந்தைகளின் நலன் கருதி பொதுத்தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்து நல்லதொரு முடிவை விரைந்து அறிவித்து முற்றுப்புள்ளி வைத்திட முன்வருவதே புதியதொரு தொடக்கம் ஆகும்.

5,8 வகுப்பு பொது தேர்வு கண்காணிப்பு பணியில் வேறு பள்ளி ஆசிரியர்கள்

5,8 வகுப்பு பொது தேர்வு கண்காணிப்பு பணியில் வேறு பள்ளி ஆசிரியர்கள்

மேல்நிலை இரண்டாமாண்டு ( + 2 ) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலைப் பதிவிறக்கம் செய்ய மீள வாய்ப்பு - தேர்வுத்துறை

மேல்நிலை இரண்டாமாண்டு ( + 2 ) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலைப் பதிவிறக்கம் செய்ய மீள வாய்ப்பு - தேர்வுத்துறை
மார்ச் 2020 , மேல்நிலை இரண்டாமாண்டு ( + 2 ) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலையும் , அதனுடன் மேல்நிலை முதலாமாண்டு ( + 1 ) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத ( + 1 Arrear ) மாணாக்கருக்கான பெயர்ப்பட்டியலையும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 18 . 11 . 2019 முதல் 22 . 11 . 2019 வரையிலான நாட்களில் இவ்வலுவலக இணையதளம் ( www . dge . tn . gov . in ) வாயிலாக பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password - ஐ பயன்படுத்தி பெயர்ப்பட்டியலினை பதிவிறக்கம் செய்து கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டது .




ஆனால் , இதுவரை சில பள்ளித் தலைமையாசிரியர்கள் மேல்நிலை பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்யாமல் தற்பொழுது செய்முறைத் தேர்வின்போது மாணவர்களுக்கு பதிவெண்கள் வழங்கும் பொருட்டு பெயர்ப்பட்டியலைப் பதிவிறக்கம் செய்ய மீள வாய்ப்பளிக்குமாறு கோரியதன் அடிப்படையில் , மேல்நிலை இரண்டாமாண்டு ( + 2 ) பெயர்ப்பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29 . 01 . 2020 முதல் 01 . 02 . 2020 வரையிலான நாட்களில் இவ்வலுவலக ( www . dge . tn . gov . in ) இணையதள முகவரிக்கு சென்று + 2 தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்ற விவரத்தினை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .




Dge -10 ம் வகுப்பு அறிவியல் பொதுசெய்முறை தேர்வு பிப்ரவரி 21 ல் தொடங்குகிறது

Dge -10 ம் வகுப்பு அறிவியல் பொதுசெய்முறை தேர்வு பிப்ரவரி 21 ல் தொடங்குகிறது
10th Science practical Examination 2019 - 2020 Date Announced DGE!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணாக்கர்களுக்கு ( பள்ளி மற்றும் தனித்தேர்வர்கள் , சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் உட்பட ) அறிவியல் செய்முறைத் தேர்வுகளை 21.02.2020 முதல் 28.02.2020 வரை நடத்திட , அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது . கீழ்க்குறிப்பிட்டுள்ள கால அட்டவணை மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி செய்முறைத் தேர்வுக்கான அனைத்துப் பணிகளையும் முடித்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .

Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2018 - 2019 - Publication of Mark

Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2018 - 2019 - Publication of Mark

தோல்வியுறும் மாணவர்கள் மறுத்தேர்விலும் தோல்வி அடைந்தால் அவர்களின் நிலை என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி

தோல்வியுறும் மாணவர்கள் மறுத்தேர்விலும் தோல்வி அடைந்தால் அவர்களின் நிலை என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி

5 , 8 பொதுத்தேர்வு - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு .!

5 , 8 பொதுத்தேர்வு - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு .!

5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் அந்தந்த பள்ளிகளிலேயே திருத்தப்படுமா ? அல்லது வேறு பள்ளிகளில் திருத்தப்படும் என்பது பரிசீலனையில் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த லூயிஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடைபெறும் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடந்த 13ம் தேதி வெளியிட்ட அரசாணையில் பொதுத் தேர்வில் தோல்வியடையும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் மறு தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தில் வெற்றி பெறலாம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சிறு வயதில் குழந்தைகளுக்கு மறுதேர்வு எழுத கட்டாயப்படுத்துவது மன உளைச்சலுக்கு ஆளாக்கும், அதோடு தரமான கல்வி அமுலில் உள்ள நாடுகளில் கூட 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை. ஆகவே 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொது தேர்வு முறையை தடை விதிக்க வேண்டும் , அது தொடர்பான அரசாணையை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி , அரவிந்தன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இதில் மனுதாரர் தரப்பில் ஆஜரான ரகுபதி ராய் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் தொடக்க நிலையில் வருகிறார்கள். தொடக்கக்கல்வியில் தேர்வுகளுக்கு கட்டாயமாக்க கூடாது. இது கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளுக்கு எதிரானது. அதோடு குழந்தைகளுக்கு அதிக அழுத்தம் ஏற்படும். இந்த தேர்வு முறையை தமிழக மட்டும்தான் அம்பலப்படுத்தியுள்ளது. பிற மாநிலங்கள் அமல்படுத்தவில்லை. ஆகவே இந்த அரசாணையை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் மாணவர்களுக்கு அடிப்படை கல்வியை தரமானதாக வழங்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த முறை அமல்படுத்தப்பட்டது. தேர்ச்சி பெறவில்லை எனில் மறு தேர்வு நடத்தப்படும். ஆகவே இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் மறு தேர்விலும் தேர்ச்சி பெறவில்லை எனில் அந்த குழந்தையின் நிலை என்ன ? என்ற கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் , விடைத்தாள் திருத்துவது குறித்து அரசு பரிசீலனை சீய்த்து வருவதாகவும் , தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை குறித்து அரசு முடிவு செய்யும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய , மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு உத்தரவிட்டிருக்கிறார்

முறையாக கல்வி பயிற்றுவிக்க முடியாத நிலையில்தான் பொதுத்தேர்வை எதிர்க்கிறார்களோ? தமிழக பாஜக கேள்வி

முறையாக கல்வி பயிற்றுவிக்க முடியாத நிலையில்தான் பொதுத்தேர்வை எதிர்க்கிறார்களோ? தமிழக பாஜக கேள்வி




முறையாக கல்வி பயிற்றுவிக்க முடியாத நிலையில்தான் பொதுத் தேர்வை எதிர்க்கிறார்களோ என்று 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளுக்கு ஆதரவாக தமிழக பாஜக குரல் எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20-ம் கல்வியாண்டில் (நடப்பு கல்வியாண்டு) இருந்து கல்வியாண்டின் இறுதியில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு அரசு ஆணையிட்டு இருக்கிறது. இதில் வளர்அறி மதிப்பீடு மூலம் 40 மதிப்பெண்களும், தொகுத்தறி மதிப்பீடு மூலம் 60 மதிப்பெண்களும் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்வு நடக்கும்.

விடைத்தாள்கள் குறுவள மைய அளவிலேயே அனைத்து பாடங்களுக்கான மதிப்பீட்டு பணி நடைபெற வேண்டும். விடைத்தாள்களை, 5, 8-ம் வகுப்பு போதிக்கும் அந்தந்த பாட ஆசிரியர்களை கொண்டே மதிப்பீடு செய்ய வேண்டும்.பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மதிப்பெண் பட்டியல்களில் இருந்து ஒவ்வொரு மாணவருக்குரிய மதிப்பெண்ணை பாடவாரியாக மதிப்பெண் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் மேற்கண்ட நடைமுறையை பல அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும், ஆசிரியர் சங்கங்களும் கடுமையாக எதிர்க்கின்றன. குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்றும், இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என்று கவலைப்படுகிறார்கள். அவர்களின் கவலை சரியா? குழந்தைகளுக்கு மன அழுத்தம் எப்படி ஏற்படும்?

பாடத்திட்டத்தின் படி, பாடபுத்தகங்களில் உள்ளபடி குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்க வேண்டியது ஆசிரியர்களின், பள்ளிகளின் கடமை. தேர்வுகளில் அந்த ஆண்டில் பயிற்றுவித்த பாடங்களில் இருந்தே வினாத்தாள் அமைக்கப்படும். ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் மிக புத்திசாலித்தனமாகவே இருப்பார்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. பொது தேர்வு என்றாலும் பாடத்திட்டத்திலிருந்து விலகி எந்த கேள்வியும் இடம்பெறாது. அப்படி இருக்கையில் இதை ஏன் எதிர்க்க வேண்டும்? குழந்தைகள் சரியாக விடை எழுத மாட்டார்கள் என்ற அவநம்பிக்கை ஏன்?

"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவை நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே" என்ற பாடல் வரிகளுக்கேற்ப, எந்த குழந்தையும் அறிவில் குறைந்ததாக இருக்க முடியாது. அறிவிற் சிறந்ததாக செய்வது ஆசிரியர்களின் பயிற்றுவிப்பிலே தான் என்பதை மறுக்க முடியாது. ஆனால், முறையாக கல்வி பயிற்றுவிக்க முடியாத நிலையில்தான் பொது தேர்வை எதிர்க்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. குழந்தைகளின் அறிவுத்திறன் மழுங்கவில்லை, மாறாக கல்வித்தரம் மழுங்கியுள்ள காரணத்தினாலேயே பொது தேர்வை ஏற்று கொள்ள தயங்குகிறார்கள்.

அரசியல் கட்சிகள் இதை எதிர்க்க காரணம் என்ன? 30 வருடங்களுக்கு முன்னர், குறைவான அளவிலே இருந்த தனியார் பள்ளிகள் இன்று புற்றீசல் போல் பரவிக்கிடப்பதற்கு காரணம் கல்வி வியாபாரமாகி விட்டது தான். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கல்வி வியாபாரமாகி விட்டது என்றால் யாரேனும் மறுக்க முடியுமா? மறுக்க முடியாத இந்த உண்மையை, கொடூரத்தை மறைக்கவே குழந்தைகளின் அறிவு மீதான பழியை சுமத்தி தங்களின் மீதான குறை வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் கடும் எதிர்ப்பு எழுகிறது. தரமான கல்வியை கொடுத்தால் அச்சம் ஏன்? மேலும் பொது தேர்வின் விடைத்தாள்களின் மதிப்பேடு குறுவள மைய அளவிலேயே நடைபெறும் என்பதும், வளர்அறி மதிப்பீடு மூலம் 40 மதிப்பெண்கள் அளிக்கட்டும் என்ற முறை உள்ள நிலையில் இந்த திட்டத்திற்கான எதிர்ப்பு ஏன் என சந்தேகம் வலு பெறுகிறது.

மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது குழந்தைகளுக்கா? அல்லது இது நாள் வரை மனம் போன போக்கில் கற்பித்து கொண்டிருந்த பள்ளிகளுக்கா? கல்வி வியாபாரிகளுக்கா? அரசு எந்த மாற்றத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் படைத்த சங்கங்களுக்கா? தமிழக அரசின் இந்த முடிவினை வரவேற்போம். குறிப்பாக கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர். பெற்றோர்கள் இந்த மாற்றத்திற்கு, முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்கிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்கிறது


Pgtrb விவகாரம் மேல்முறையீடு செய்கிறதா Trb? ராமதாஸ் கண்டன

Pgtrb விவகாரம் மேல்முறையீடு செய்கிறதா Trb? ராமதாஸ் கண்டனம்!

டாக்டர்.ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை.

TRB முதலில் வெளியிடப்பட்ட முடிவுகளில், வேதியியல் ஆசிரியர்கள் தேர்வின் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், மேல் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் மற்றும் இட ஒதுக்கீடு விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய மெனு உருப்படி தயாரிக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் வலியுறுத்தினார்.

இதையடுத்து, இரண்டாம் கட்டத்தில், தமிழ், பார் மற்றும் பொருளாதார பாடங்களின் தேர்தல் முடிவுகள் மற்றும் இட ஒதுக்கீடு விதிகள் மீறப்பட்டன.  இதற்கிடையில், வேதியியல் பாடத்தில், பொதுத் தேர்வில் வெற்றி பெற்றவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைப் பொதுப்பிரிவில் சேர்க்காமல் , இடஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன .

அந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் , ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்தது மட்டுமின்றி , வேதியியல் பாட ஆசிரியர் தேர்வுப்பட்டியலை ரத்து செய்து விட்டு , இடஒதுக்கீட்டு விதிகளை முழுமையாக கடைப்பிடித்து புதிய தேர்வுப் பட்டியலை அடுத்த இரு வாரங்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் என்று ஆணையிட்டார் .

சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட இரு வார அவகாசம் கடந்த 23 - ஆம் தேதி யுடன் முடிவடைந்து விட்டது . ஆனா லும் , ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய பட்டி யலை தயாரித்து வெளியிடவில்லை . அதற்கு மாறாக , உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதா கத் தெரிய வந்துள்ளது . இது சமூக நீதிக்கு எதிரானது என்று ராமதாஸ் கூறியுள்ளார்

எல்கேஜி, யுகேஜி குழந்தைகளின் திறனை வளர்க்க அரசு மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

எல்கேஜி, யுகேஜி குழந்தைகளின் திறனை வளர்க்க அரசு மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

எல்கேஜி, யுகேஜி குழந்தைகளின் திறனை வளர்க்க அரசு மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிமதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற அரசு மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியில் முகமூடி அணிந்து நடித்துக் காட்டும் ஆசிரியர்கள் .

மதுரை

எல்கேஜி, யுகேஜி குழந்தைகளின் திறனை வளர்க்க மதுரையில் அரசு மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் உள்ள 63 அரசு நடுநிலைப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் (எல்கேஜி, யூகேஜி) தொடங்கப்பட்டுள்ளன. இங்கு ஆரம்பத்தில் 630 மாணவர்கள் படித்தனர்.மழலையர் வகுப்பு தொடங்கிய பின்னர் தற்போது 850 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

மழலையர் வகுப்பு குழந்தைகளின் திறனை வளர்க்கும் வகையில், மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கான மேம்பாட்டுப் பயிற்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் நடத்தப்படும் இந்த 2-வதுகட்ட மேம்பாட்டுப் பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்.

மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவக்குமார், கருத்தாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். 3 முதல் 5 வயதுள்ள குழந்தைகளை முன்னேற்றும் வகையில் உடலியக்கப் பயிற்சி, தசை பயிற்சி, மனவளர்ச்சி பயிற்சி, மூளை வளர்ச்சி பயிற்சி அளிக்கப்பட்டது.

குழந்தைகளை ஈர்க்கும் வகையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மூலம் கற்பித்தல் முறைகள், விலங்குகளின் முகமூடிகளை அணிந்து அறிமுகப்படுத்துதல், மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்த்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மொத்தம் 63 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive