இளநிலை பொறியியல் பட்டம் பெற்று பிஎட் தேர்ச்சி பெற்றவர் கள் ‘டெட்’ தேர்வு எழுதி பள்ளி களில் கணித ஆசிரியராகப் பணிபுரியலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளைப் போல பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களும் பி.எட் படிக்க 2015-16-ம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக மொத்தமுள்ளபி.எட் இடங்களில் பொறியியல் பட்டதாரி களுக்கு 20 சதவீதஇடங்கள் ஒதுக் கப்பட்டன. அதன்படி பி.இ, பி.டெக் பட்டதாரிகள் இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளின்கீழ் பி.எட் படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.இதற்கிடையே இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் தின்படி மத்திய, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (‘டெட்‘) தேர்ச்சி பெற்றால் மட்டுமே அனைத்துவிதப் பள்ளி களிலும் ஆசிரியராகப் பணிபுரிய முடியும்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ‘டெட்’ தேர்வின்போது பொறியியல் முடித்து பி.எட் படித்தவர்கள் தேர்வு எழுத அனு மதிக்கப்படாததால், அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல முடி யாத நிலை ஏற்பட்டது.
இதனால் பி.எட் படிப்பு களில் சேர பொறியியல் பட்டதாரி கள் ஆர்வம் காட்டவில்லை. இதைத் தொடர்ந்து இடஒதுக்கீடு 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.இந்த விவகாரம் தமிழக அரசின் கவனத்து கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து இளநிலை பொறியியல் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள் ‘டெட்’ தேர்வு எழுத உயர்கல்வித் துறை தற்போது அனுமதி அளித்துள்ளது. அதன்படி பி.இ படிப்பில் எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்து இருந்தாலும் அவர்கள் பி.எட் முடித்து பின்னர் ‘டெட்’ தேர்வை எழுதி பள்ளிகளில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு கணித ஆசிரிய ராகப் பணிபுரியலாம்என்று உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் பி.எட் படிப்புகளில் கணினி அறிவியல், இயற்பியல், வேதியல் பாடங்களைத் தேர்வு செய்து படிக்கும் மாணவர்களின் நிலை குறித்து அரசாணையில் விளக்கம் தரப்படவில்லை.
இதனால் அந்த பாடப் பிரிவுகளில் பி.எட் படிப்பவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாகியுள்ளது. இந்த விவகாரத் தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சரிசெய்ய தமிழக அரசு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.