246 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கும் பணி தீவிரம்!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, December 6, 2019

246 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கும் பணி தீவிரம்!!

246 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கும் பணி தீவிரம்!!


கடலுார் மாவட்டத்தில், 246 அரசுஉயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், உயர் ரக தொழில்நுட்ப கணினிஆய்வகம் அமைக்கும் பணி தீவிரமாகநடந்து வருகிறது. தமிழகத்தில், அரசுபள்ளிகளில் கல்வியின் தரத்தைமேம்படுத்த, கல்வி துறை பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

குறிப்பாக, அரசு பள்ளிகளில் கணினி, மடிக்கணினி வாயிலாக கல்விகற்பிக்கப்படுகிறது.இதற்காக, இணையதள வசதியும்ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான அரசு பள்ளிகளில்ஒன்றிரண்டு எண்ணிக்கையில்கணினி, மடிக்கணினி உள்ளதால், கல்வி கற்பிப்பதிலும், ஆசிரியர்கள், மாணவ, மாணவியரின் வருகைபதிவேடு விவரங்கள், நலத்திட்ட உதவிபெறுவோர் எண்ணிக்கை, அனைத்துதேர்வு தொடர்பான விவரங்கள்பதிவேற்றம் செய்வதிலும், நுழைவுதேர்வுக்கு விண்ணப்பிப்பதிலும்தாமதம் ஏற்படுகிறது.

இதனைகருத்தில் கொண்டு மாவட்டம்வாரியாக அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளிகளில், உயர் ரக தொழில்நுட்பகணினி ஆய்வகம் அமைக்க பள்ளிகல்வி துறை திட்டமிட்டது.

அதன்படி, கடலுார் மாவட்டத்திலும் உயர்ரக தொழில் நுட்ப கணினி ஆய்வகம்அமைக்கும் பணி கடந்த மூன்றுமாதங்களாக நடக்கிறது. மாவட்டத்தில்246 அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளிகள் உள்ளன.

இதில், 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டமாணவ, மாணவியர்படிக்கின்றனர்.அரசு உயர்நிலைப்பள்ளிகளில், 10 கம்ப்யூட்டர்கள், மேல்நிலை பள்ளிகளில் 20 கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டு, இணையதள வசதி ஏற்படுத்தும் பணிநடந்து வருகிறது.

இதுவரை 206 பள்ளிகளில் ஆய்வகம்அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளபள்ளிகளில் ஆய்வகம் அமைக்கும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிஒருவர் கூறுகையில், மாவட்டத்தில்அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளிகளில் கணினி ஆய்வகம்அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலமாக ஒவ்வொரு வகுப்பு மாணவ, மாணவியருக்கும் குறிப்பிட்ட நேரம்ஒதுக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படும். குறிப்பாக, கம்ப்யூட்டர் இயக்குவது, பாடம் சார்ந்த தகவல்கள் பெறுவதுகுறித்தும் பயிற்சி அளிக்கப்படும். மேலும், ஆசிரியர், மாணவ, மாணவியரின் வருகை பதிவேடுவிவரங்கள், அனைத்து தேர்வுகள்தொடர்பான விவரங்களைஉடனுக்குடன் பதிவேற்றம் செய்யலாம். நுழைவுத் தேர்வுகளுக்கும்விண்ணப்பிக்கலாம். பணிகள்முடிவடைந்ததும், விரைவில் கணினிமூலமாக கல்வி கற்பிக்கப் படும்என்றார்.



Post Top Ad