ரூ. 37,500 வரிச் சலுகைக்கு வாய்ப்பு..! வரும் பட்ஜெட்டில் கொண்டு வருமா மத்திய அரசு..! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, December 5, 2019

ரூ. 37,500 வரிச் சலுகைக்கு வாய்ப்பு..! வரும் பட்ஜெட்டில் கொண்டு வருமா மத்திய அரசு..!

ரூ. 37,500 வரிச் சலுகைக்கு வாய்ப்பு..! வரும் பட்ஜெட்டில் கொண்டு வருமா மத்திய அரசு..!



இன்னும் சில மாதங்களில் 2019 - 20 நிதி ஆண்டே முடிந்து விடும். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால்... இன்னும் 3 மாதம் 27 நாட்கள் மட்டுமே. அதற்குள், அடுத்த 2020 - 21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பற்றிய விவாதங்கள் தொடங்கிவிட்டது. இந்த பட்ஜெட் வரும் பிப்ரவரி 2020-ல் நம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசிக்க இருக்கிறார்.

இந்த 2020 - 21 பட்ஜெட்டில் சம்பளதாரர்களுக்கான தனி நபர் வருமான வரி வரம்பு மாற்றப்படலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. லைவ் மிண்ட், எகனாமிக் டைம்ஸ் போன்ற செய்தி நிறுவனங்களும் இந்த செய்தியை தங்கள் வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

தற்போதைய வரி வரம்பு 1 ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை - 0 % வரி 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை - 5 % வரி, 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை - 20 % 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வரும் வருமானத்தில் 30 % வருமான வரியாகச் செலுத்த வேண்டி இருக்கிறது.

 

எப்படி மாறும் 1 ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை - 0 % வரி 2.5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை - 10 % வரி, 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை - 20 % வரி செலுத்த வேண்டி இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

ஏன் இந்த மாற்றம் கடந்த செப்டம்பர் 2019-ல் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிகளுக்கு ஒரு பெரிய சலுகையைக் கொடுத்தது அரசு. இப்போது இந்த புதிய வரி வரம்பின் மூலம் நடுத்தர மக்களுக்கு சலுகைகளைக் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். இந்த புதிய வருமான வரி வரம்பு மாற்றம் வருமான வரித் துறையின் டாஸ்க் ஃபோர்ஸின் பரிந்துரைகள் அடிப்படையில் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

 

யாருக்கு லாபம் இந்தியாவில் கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் சுமாராக 5.5 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்து இருக்கிறார்களாம். அதில் 27 சதவிகிதம் பேர், (எண்ணிக்கையில் சுமாராக 1.4 கோடி பேர்) பயன் பெறுவார்களாம். இவர்கள் எல்லாம் ஆண்டுக்கு 5 - 10 லட்சம் ரூபாய்க்குள் சம்பளம் வாங்குபவர்களாம்.

எப்படி ஒருவர் ஆண்டுக்கு 10 லட்சம் சம்பாதிக்கிறார் என வைத்துக் கொள்வோம். தற்போதைய நடை முறைப் படி 2.5 - 5 லட்சம் ரூபாய்க்கு - 5% வருமான வரி (12,500 ரூபாய்) + 5 முதல் 10 லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு 20% வருமான வரி (1,00,000 ரூபாய்) என மொத்தம் 1,12,500 ரூபாய் செலுத்த வேண்டும்.

மிச்சம் அவருக்கு, புதிய நடைமுறைப் படி கணக்கிட்டால், 2.5 முதல் 10 லட்சம் ரூபாய்க்கு மொத்தமே 10 % (7,50,000 * 10% = 75,000) வருமான வரி செலுத்தினால் போதும். ஆக 1,12,500 (தற்போதைய வரம்பு) - 75,000 (புதிய வரம்பு) = 37,500 ரூபாய் மிச்சமாகும். இப்போது சொல்லுங்கள், இந்த புதிய திட்டம் வந்தால் அதிகம் பயன் அடையப் போவது 5 - 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் தானே..?



Post Top Ad