Flash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய Login id மற்றும் Password - நாளை ( 11.12.2019 ) முதல் பயன்படுத்த உத்தரவு.
பள்ளி தரத்தை மேம்படுத்த இப்படியொரு கருத்துக் கேட்புக் கூட்டமா? 9.12.19 கல்வி ஆணையரின் ஆய்வுக் கூட்டம ஓர் பார்வை!
பள்ளி தரத்தை மேம்படுத்த இப்படியொரு கருத்துக் கேட்புக் கூட்டமா? 9.12.19 கல்வி ஆணையரின் ஆய்வுக் கூட்டம ஓர் பார்வை!
9.12.19 கல்வி ஆணையரின் ஆய்வுக் கூட்டம் - கோவை PSG சர்வஜனா
பள்ளி தரத்தை மேம்படுத்த இப்படியொரு கருத்துக் கேட்புக் கூட்டமா? அதுவும் தமிழ்நாட்டிலா? எனது 13 வருட பணி அனுபவத்தில் கல்வி குறித்த கலந்துரையாடலில் இப்படியொரு கருத்துக் கேட்புக்கூட்டம் இல்லையில்லை தனித்தனியாக அதுவும் மண்டல அளவில் சொல்வதை அப்பொழுதே கணினியில் பதிவு செய்து அதனை இறுதியில் தொகுத்து வழங்கியது என புதிய பாடத்திட்டத்தில் / பாடப்புத்தகத்தில் நமது ஆசிரியர்கள் மூலமே புரட்சியை ஏற்படுத்திவிட்டுச் சென்ற மதிப்பு மிகு முன்னாள் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் அய்யா அவர்களுக்குப் பின் அதே மாதிரியான அணுகுமுறையால் நேற்று நமது கல்வித்துறை ஆணையர் மதிப்பு மிகு சிஜி.தாமஸ் வைத்யன் அவர்கள் கருத்துக் கேட்ட விதமும் அணுகுமுறையும் கல்வித் தர மேம்பாட்டின் மாற்றத்திற்கான தொடர் ( அறி) குறி நேற்று கோவையில் தொடங்கியிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.
* தர மேம்பாடு குறித்து கீழ்கண்ட தலைப்புகளில் தொடக்கநிலை, நடுநிலை உயர்நிலை, மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை, பட்டதாரி, இடைநிலைஆசிரியர்கள் என மாவட்டத்திற்கு 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
1) உள்கட்டமைப்பு வசதி
2) ஆசிரியர் திறன் மேம்பாடு
3) பயிற்சிகள்
4) மாணவர்களின் பாடவாரிதிறன் மேம்படுத்தல்
5) பாடத்திற்கு ஏற்றவாறு வகுப்பறை செயல்பாடு
6) மேற்பார்வை / கண்காணிப்பு சார்ந்த மேம்பாடு
7) SMC /PTA / VEC மேம்பாடு
8) பாடப்புத்தகமேம்பாடு
9) மதிப்பீடு
10) பொதுவானவை சார்ந்து இன்றைய நிலை குறைபாடுகள், இடர்பாடுகள், எதிர்காலத் தேவை பற்றிஎன்பதாகும்.
இதில்கல்வித்துறை ஆணையாளரிடம் நேரில் நான் தெரிவித்த கருத்துகள்
1) பயிற்சிகள் சார்ந்து பள்ளிக்குள் சக ஆசிரியர்களுடனான இணக்கம் மாற்றுத் துறைகளை பள்ளி வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல் பாலினப்பாகுபாடு குறித்த பயிற்சிகள் தேவை. பயிற்சிகள் கல்விச் செயல்பாடுகளை பள்ளிகளை பாதிக்கக் கூடாது.2 நாட்களுக்கு மேல் பயிற்சி வேண்டாம். ஆசிரியர்கள் விருப்பம், சுழற்சி அடிப்படையில் அவரவர் விரும்பும் பயிற்சிகளுக்கு அனுப்பலாம்.
2) PTA/smc முறையாக தேர்ந்தெடுத்தல், கூட்டுதல், செயல்படுதலை உறுதிப்படுத்த வேண்டும்.
3) தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, இசை, ஓவியம் தனித்திறன் மேம்பாட்டிற்கு சிறப்பு ஆசிரியர்கள் தனிப்பாட வேளை வேண்டும்.
4)பள்ளிக் கண்காணிப்பில் BRT முதல் CEO வரை அதிகாரம் செலுத்துபவராக குற்றம் சுமத்துபவராக இல்லாமல் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி பள்ளி / கற்பித்தல் / மாணவர்கள் / ஆசிரியர்கள் சார்ந்து மேம்படுத்த ஆலோசனை வழங்கி செயல்படுத்த , அணுகு முறையில் மாற்றம் தேவை.
5) ஆசிரியர்களை கல்வி சாராத பணி களில் ஈடுபடுத்தக்கூடாது.
6) தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் வாசிப்புப் பயிற்சிமேம்பட நூலகப் பயன்பாடு, வாசிப்பு முகாம்மாதம் 1 முறை நடத்தப்பட வேண்டும்.
7) குழந்தைகளுக்கான மாத / வார இதழ்கள் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்
8) ரெட் கிராஸ் / ஸ்கவுட் போன்ற அமைப்புகள் ஏற்படுத்த பட்டு சிறப்பாக செயல்பட நடவடிக்கை வேண்டும்.
9) 5,8 வகுப்புக்கு பொதுத் தேர்வு வேண்டாம்.
10) அனைத்துப் பள்ளிகளுக்கும் தொலைபேசி இணைப்பு/ இணைய வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
11) சமூக அறிவியல் அறிவியல் பாடங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.
12) ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏதேனும் ஒரேயொரு வருகைப் பதிவேடு முறை மட்டுமே பின்பற்ற வேண்டும்.என்பதாகும்.
இறுதியில் அனைத்து ஆசிரியர்களின் கருத்துகளும் கூட்டத்தில் அனைவரின் முன்னிலையிலும் நமது மாவட்டக் கல்வி அலுவலர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. கலந்து கொண்டமைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் ஆணையர் அம்மாவும் நமது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய அய்யணன் அய்யா அவர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து ஆணையர் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், திட்ட அலுவலர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டமானது காலை 11.00 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்கு மேலும் தொடர்ந்தது. புதிய விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து எல்லோரும் வெளியேறினோம். காத்திருப்போம் நாம் அனைவரும் நல் மாற்றத்திற்கு.
அன்புடன்...,
N. பழனிக்குமார்.
பி.எட் முடித்த பொறியியல் பட்டதாரிகள் ‘டெட்’ தேர்வு எழுதி பள்ளி ஆசிரியராகலாம்
பிட் இந்தியா' - பள்ளிகளுக்கு பரிசு வழங்கும் போட்டி அறிவிப்பு.
பிட் இந்தியா' - பள்ளிகளுக்கு பரிசு வழங்கும் போட்டி அறிவிப்பு.
பிட் இந்தியா' செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு, பரிசு வழங்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில், 'பிட் இந்தியா' இயக்கம், கல்வி நிறுவனங்களில் துவக்கப்பட்டு உள்ளது. உடற்பயிற்சிகள் செய்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து, அனைத்து பள்ளிகளுக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருக்க வேண்டும். ஒரே நேரத்தில், இரண்டுக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் நடக்கும் வகையில், பள்ளி மைதானம் இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் தினமும், விளையாட்டு, யோகா, இசை ஆகியவற்றில், ஏதாவது ஒன்று நடத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம், ஒரு மணி நேரமாவது, மாணவர்கள் விளையாட வேண்டும்.
இதுபோன்ற வசதிகள் மற்றும் செயல்பாடுகள் உள்ள பள்ளிகள், பிட் இந்தியா போட்டியில் பங்கேற்கலாம். இதற்காக, தங்களின் உடற்கல்வி பயிற்சி விபரங்களுடன், வரும், 31ம் தேதிக்குள், www.fitindia.gov.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னறிவிப்பின்றி பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும்: கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு
முன்னறிவிப்பின்றி பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும்: கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு
அரசுப் பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா் உள்ளிட்டோருக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 48 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். சுமாா் 2.3 லட்சம் ஆசிரியா்கள்பணிபுரிகின்றனா். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசுபல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இருப்பினும், பள்ளிகளில் அரசின் திட்டங்கள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என பள்ளிக் கல்வித்துறைக்கு பல்வேறு புகாா்கள் வந்துள்ளன. இதையடுத்து அரசு பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி திடீா் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட கல்விஅதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறைஅதிகாரிகள் கூறியதாவது: நாட்டில் பிற மாநிலங்களைவிட அதிகளவில் ரூ.28 ஆயிரம் கோடி வரை பள்ளிக்கல்வித்துறைக்கு நிதிஒதுக்கப்பட்டு பல்வேறு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.மாணவா்களுக்குப் பாடம் நடத்துவதற்காக கற்றல் உபகரணங்களும், விளையாடுவதற்குரிய பொருள்களும் அனைத்துபள்ளிகளுக்கும் தரப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை முறையாக ஆசிரியா்கள் பயன்படுத்தாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. மாணவா் சோ்க்கை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் பள்ளி தலைமையாசிரியா்கள் முன்னெடுப்பதில்லை என்பது உள்பட பல்வேறு புகாா்கள் அரசுக்கு வந்துள்ளன.
அதேவேளையில், துறை அதிகாரிகள் ஆய்வுகளுக்குச் செல்லும் முன்னா் தகவல் தெரிவித்துவிடுவதால் தலைமையாசிரியா்கள் அதற்கான முன்னேற்பாடுகளைத் தயாா் செய்துவிடுகின்றனா். இதனால் தவறுகளை சரிசெய்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதைத் தவிா்க்க முன்னறிவிப்பின்றி பள்ளிகளுக்குசென்று கள ஆய்வு செய்ய முதன்மை, மாவட்ட, வட்டார கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரிய பயிற்றுநா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திடீா்ஆய்வின்போது, பள்ளிகளில் சுகாதார வசதி, தூய்மைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிா, மாணவா்களின் கற்றல் திறன், அரசு வழங்கிய உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா, மாணவா்கள்ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறாா்களா என்பதை கண்காணித்து அதிகாரிகள் அறிக்கை சமா்பிக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.
2003-04 தொகுப்பூதிய நியமன ஆசிரியர்களுக்கு நியமனம செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை, பண ப்பலன் வழங்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு -judgement copy
2003-04 தொகுப்பூதிய நியமன ஆசிரியர்களுக்கு நியமனம செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை, பண ப்பலன் வழங்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு -judgement copy
Click Here To Download - judgement copy
CBSE பாடத்திட்டத்திலோ அல்லது வேறு மாநில பாடத்திட்டத்திலோ 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடுமாநில அரசு பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம் என பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
CBSE பாடத்திட்டத்திலோ அல்லது வேறு மாநில பாடத்திட்டத்திலோ 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடுமாநில அரசு பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம் என பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2017-2018 ஆம் கல்வியாண்டுக்கு முன் 11 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது அதே பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், தேர்வை எழுதும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடித் தனித்தேர்வர்கள் 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய பின்னரே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு தேதிகள்! (ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து)
தேர்தல் அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு தேதிகள்! (ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து)
# 1st class 15-12-2019
# 2nd class 22-12-2019
(For PHASE - I)
# 3rd class 26-12-2019
(For PHASE - II)
# 3rd class 29-12-2019
மாவட்ட ஆட்சியர் தலைமையில் தலைமையாசிரியர்கள் ஆய்வுக்கூட்டம் - CEO Proceedings
திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனம்: ஆன்லைன் டிக்கெட்டுகள்
திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனம்: ஆன்லைன் டிக்கெட்டுகள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு ஆன்லைன் மூலம் கட்டண தரிசனச் சீட்டுகள் விற்பனை செய்யப்படும் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது. அண்ணாமலையார் கோயிலில் வரும் 10-ம் தேதி அதிகாலை 4 மணிக்க பரணி தீபமும், 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். மேலும், தங்க கொடி மரம் முன்பு மாலை 6 மணிஅளவில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சிக் கொடுக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
இதையொட்டி பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் கட்டண சீட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளது. பரணி தீப தரிசனத்துக்கு 500 எண்ணிக்கையில் ரூ.500-க்கான கட்டண சீட்டுகள் விற்பனை செய்யப்படும். இதேபோல், மகா தீபத் தரிசனத்துக்கு 100 எண்ணிக்கையில் ரூ.600-க்கான கட்டண சீட்டுகளும், 1000 எண்ணிக்கையில் ரூ.500-க்கான கட்டணச் சீட்டுகள் விற்பனை செய்யப்படும்.
டிசம்பர் 7-ம் தேதி காலை 10 மணி முதல் ஆன்லைன் மூலம் வழங்கப்படும். ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும். ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டண சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். கட்டணச் சீட்டு பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் வழியாகவே கட்டணச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பரணி தீபத் தரிசனத்துக்கு வரும் 10-ம் தேதி அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரையும், மகா தீபத் தரிசனத்துக்கு வரும் 10-ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே கட்டண பதிவு சீட்டு பெற்றவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பதிவிறக்கம் செய்யப்பட்ட கட்டணச் சீட்டு மற்றும் அசல் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்தில், அம்மணி அம்மன் கோபுரம் (வடக்கு கோபுரம்) வந்து சேர வேண்டும். அந்த கோபுர வாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். நேரம் கடந்து வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நெய் காணிக்கை
மகா தீபத்துக்கு பக்தர்களிடம் இருந்து நெய் காணிக்கை பெறப்படுகிறது. ராஜகோபுரம் அருகே உள்ள திட்டி வாசல் அருகேயும், திருமஞ்சன கோபுர நுழைவு வாயில் மற்றும் பே கோபுரம் அருகே மலையேறும் பாதையின் முகப்பு பகுதியில் நெய் காணிக்கை பெறப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
Click Here - TV Malai - Karthigai Dheepam - Online Ticket - Direct Link
கல்வித்துறையில் முதல்முறையாக நியமிக்கப்பட்ட பள்ளிக்கல்வி ஆணையர் இன்று முதல் மண்டல அளவில் நேரில் ஆய்வு.!!
கல்வித்துறையில் முதல்முறையாக நியமிக்கப்பட்ட பள்ளிக்கல்வி ஆணையர் இன்று முதல் மண்டல அளவில் நேரில் ஆய்வு.!!
பள்ளிக்கல்வித்துறையில் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ள ஆணையர் இன்று முதல் தமிழகம் முழுவதும் மண்டல அளவில் கல்வித்தரத்தை உயர்த்துவது குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். தமிழகத்தில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின்கீழ் 37 ஆயிரத்து 211 அரசு பள்ளிகளும், 8 ஆயிரத்து 357 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12 ஆயிரத்து 419 தனியார் பள்ளிகளும் உள்ளன.
இதில் 32 முதன்மைக்கல்வி அலுவலர்கள், 117 மாவட்ட கல்வி அலுவலர்கள், 413 வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளனர். இவர்களுக்கு மேல் இயக்குனர்கள் மற்றும் ஐஏஎஸ் அந்தஸ்தில் முதன்மை செயலாளர் உள்ளனர். பள்ளிக் கல்வியில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி துறை இயக்குநர்களைக் கண்காணிக்க பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டது. புதிய ஆணையராக சிஜி தாமஸ் வைத்தியன் நியமிக்கப்பட்டார். இவர், கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக சென்று கல்வித்தர மேம்பாடு குறித்து ஆலோசிக்க உள்ளார்.
இன்று (9ம் தேதி) முதல் 19ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஆலோசனை நிகழ்வில் அந்தந்த மண்டல முதன்மைக் கல்வி அலுவலர்கள், கல்வி மாவட்ட அலுவலர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட 20 தலைமையாசிரியர்கள், 20 ஆசிரியர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
முதல்கட்டமாக இன்று கோவையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட அளவில் ஆலோசனை நடத்துகிறார். பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை ஆலோசனை நடக்க உள்ளது. ஆலோசனையில் மாணவர்களின் கல்வித்திறன், பயிற்றுவித்தல் முறை, இவற்றை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கல்வி வளர்ச்சி குறித்து கருத்துக்களை கேட்டு கலந்துரையாட உள்ளார்.
தொடர்ந்து நாளை 10ம் தேதி சேலம் மண்டல அளவில் சேலத்திலும், 11ம் தேதி விழுப்புரம் மண்டலத்திலும், 12ம் தேதி சென்னை மண்டல அளவில் சென்னையிலும், 13ம் தேதி திருச்சி மண்டலத்திற்கு திருச்சியிலும், 16ம் தேதி நெல்லை மண்டல அளவில் நெல்லையிலும், 17ம் தேதி மதுரை மண்டலத்திற்கு மதுரையிலும், 18ம் தேதி தஞ்சை மண்டலத்திற்கு தஞ்சையிலும், 19ம் தேதி திருவண்ணாமலை மண்டலத்திற்கு திருவண்ணாமலையிலும் ஆய்வு நடத்த உள்ளார்.
சென்னையில் மட்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலோசனை நடக்கிறது.கூட்டத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் விவரங்களை commissionersedu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உடனே அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஆணையர் சுற்றுப்பயணத்தின்போது பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வாய்ப்புள்ளதால் போதிய முன்னேற்பாட்டுடன் தயாராக இருக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 27 & 30 தேதிகளில் எந்தெந்த ஒன்றியங்களுக்கு எந்தெந்த தேதிகளில் தேர்தல்? - அரசிதழில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 27 & 30 தேதிகளில் எந்தெந்த ஒன்றியங்களுக்கு எந்தெந்த தேதிகளில் தேர்தல்? - அரசிதழில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்
9 மாவட்டங்களை தவிர்த்து நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 27 & 30 தேதிகளில் எந்தெந்த ஒன்றியங்களுக்கு எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது என்று முழு விவரத்தை அரசிதழில் வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்.
உச்சநீதிமன்ற உத்தரவால் கடந்த இரண்டாம் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை ரத்து செய்யப்பட்டு புதிதாக தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று தமிழக அரசிதழில் இது தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 156 ஊராட்சிகளுக்கு டிச.27 அன்றும், 158 ஊராட்சிகளுக்கு டிச.30 அன்றும் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
In accordance with the Orders of the Hon’ble Supreme Court of India, dated 6-12-2019 in I.A. 182868/2019, in
Civil Appeal No(s).5467-5469/2017 with M.A.2328/2019 in W.P.(C) No.1267/2018, etc., and in exercise of the powers
conferred under sub-section (1) of Section 239 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994)
and Rule 24 of the Tamil Nadu Panchayats (Elections) Rules, 1995, the Tamil Nadu State Election Commission, for the
purpose of filling up of ordinary vacancies in the offices of Ward Members of District Panchayats specified in the Tables
annexed to this Notification, hereby calls upon the electors of the said wards to elect their respective ward members,
in accordance with the following programme of election:-
All District - Two Phase Election Schedule - Download here ( pdf )
உங்களின் புதிய வார்டு, புதிய பாகம் எண், புதிய வரிசை எண், வாக்குச்சாவடி எங்குள்ளது தெரிந்துகொள்ள வேண்டுமா?
உங்களின் புதிய வார்டு, புதிய பாகம் எண், புதிய வரிசை எண், வாக்குச்சாவடி எங்குள்ளது தெரிந்துகொள்ள வேண்டுமா?
உள்ளாட்சிகளின் வார்டுகளை மாற்றி வரையறை செய்துள்ளார்கள்.
உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்திருந்தால் கீழுள்ள லிங்கை பயன்படுத்தி தற்பொழுது உள்ள உங்களின் புதிய வார்டு, புதிய பாகம் எண், புதிய வரிசை எண், வாக்குச்சாவடி எங்குள்ளது உட்பட அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் இதை பயன்படுத்தி கொள்ளலாம். நன்றி..
http://www.tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php
குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!!
குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!!
கடந்த ஜூலை 12 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை நடந்த குருப்- 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகளை தேர்வாணையம் இன்று வெளியிட்டது.
துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 181 உயர் பதவிக்கான பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகளை
http://www.tnpsc.gov.in/results.html/
என்ற அரசு இணையதளத்தில் பார்க்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் 23 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரூ. 18,700+ சம்பளத்தில் தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
ரூ. 18,700+ சம்பளத்தில் தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு, வனத்துறையில் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் : 320
வனக்காப்பாளர் - 227 காலிப்பணியிடங்கள்
ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் : 93 காலிப்பணியிடங்கள்
சம்பளம் : ரூ. 18,700 முதல் ரூ. 57,900/- வரை
கல்வித் தகுதி :
12வது வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்க கட்டணம் :
SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.150/-
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/-
வயது வரம்பு :
21 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.forests.tn.gov.in/ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FG-FGDL-2019/FG_FGDL_2019_Eng_Notifn.pdfபார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 3வது வாரம் முதல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1வது வாரம் வரை
Biometric- வருகைப்பதிவு நேரம்(Biometric Warning) குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
Biometric- வருகைப்பதிவு நேரம்(Biometric Warning) குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
வருகைப்பதிவேடு முறைமை சார்பாக கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை
பின்பற்றுமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1. பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை தரும் நேரங்களான காலை 9 மணி வரை பச்சை நிறம், 9 மணி முதல் 9.15 மணி வரை - மஞ்சள் நிறம் மற்றும் 9.15 மணி முதல் 9.30 மணி வரை - சிவப்பு நிறமாக தொட்டுணர் கருவி பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
2. ஒரு ஆசிரியருக்கு 3 நாட்கள் சிவப்பு நிறமாக தொட்டுணர் கருவியில் பதிவு இருப்பின் 1/2 நாள் தற்செயல் விடுப்பாக கணக்கிடப்பட வேண்டும்.
3. பள்ளியில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் காலை 10.00 மணியளவில் பணிக்கு வருபவராயின் காலை 10.00 மணிக்கும் மாலை 6.00 மணிக்கும் தொட்டுணர் கருவியில்
பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
4, சிறப்பு வகுப்பு மேற்கொள்ளும் ஆசிரியர்கள் காலை ஒரு மணி நேரம் முன்னதாகவும், மாலையில் ஒரு மணி நேரம் பின்னதாகவும் தொட்டுணர் கருவியில் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.