வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் கலந்தாய்வில் அனுமதி: பிற ஆசிரியர்கள் அதிருப்தி
பொதுமாறுதல் கலந்தாய்வில் வழக்குதொடர்ந்த ஆசிரியர்கள் மட்டும் ஒரேஇடத்தில் மூன்று ஆண்டுகள்பணியாற்றாவிட்டாலும் கலந்துகொள்ளலாம், என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதால் மற்றஆசிரியர் அதிருப்தியில்
உள்ளனர்.தமிழகத்தில் 2019-20ம்கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள்பொது மாறுதல், பதவி உயர்வுகலந்தாய்வு கடந்த ஜூலை மாதம்நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதில் பங்கேற்க, தற்போது பணிபுரியும்பள்ளியில் மூன்றாண்டுகள்பணியாற்றி இருக்க வேண்டும் எனநிபந்தனை விதிக்கப்பட்டது. இதற்குஎதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் சில ஆசிரியர்கள்வழக்கு தொடர்ந்தனர்.இதனால்கலந்தாய்வு நிறுத்தப்பட்டது. நீதிமன்றஉத்தரவின் படி கலந்தாய்வுநெறிமுறைகள் குறித்து திருத்தம்செய்து தற்போது பள்ளிக்கல்வித்துறைஅரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி வழக்கு தொடர்ந்தவர்கள்மட்டும் மூன்றாண்டுகள்பணியாற்றாமல் இருந்தாலும் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். மற்ற ஆசிரியர்கள்கலந்துகொள்ள இயலாது. இது மற்றஆசிரியர்களிடம் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.







0 Comments:
Post a Comment