சங்கங்கள் கலைக்கபடும்: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை :

சங்கங்கள் கலைக்கபடும்: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை :

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் விளையாட்டு பிரிவில் திறமையில்லாத மாணவர்கள் சங்கங்கள் மூலமாக சேர்வதாக புகார்கள் அதிகரித்து வருவதாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட துறைக்கு அதிக புகார்கள் சென்று கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, 'மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் விளையாட்டு பிரிவில் திறமையில்லாத மாணவர்கள் சங்கங்கள் மூலமாக சேர்வதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன என்றும், இந்நிகழ்வு தொடர்ந்தால்சங்கங்கள் கலைக்கப்படுவதற்கு சட்டங்கள் உருவாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.


உண்மையான விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் சங்கத்தில் நிர்வாகிகளாக இருப்பவர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் அமைச்சரின் அறிவிப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive