வந்துவிட்டது இந்தியாவின் "Navic" நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் ! உங்கள் மொபைலில்

வந்துவிட்டது இந்தியாவின் "Navic" நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் ! உங்கள் மொபைலில்


இந்திய அரசு தொழில்நுட்பம் மற்றும்நாட்டின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு அதிரடியான முடிவினைஎடுத்துள்ளது. இந்தியா முழுவதும்தற்போது போக்குவரத்து மற்றும்இருப்பிடத்தை அறிய அமெரிக்கவிமானப்படைக்கு சொந்தமான GPS அமைப்பை தான் பயன்படுத்திவருகிறோம்.


இதன்உதவியுடன்தான் கூகுள் மேப்உள்ளிட்ட அனைத்து ஆப்களும் இயங்கிவருகின்றன. மேலும் இவற்றின் மூலம்தற்போது இந்தியாவின் அனைத்துஇருப்பிடங்களும் அண்டைநாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்காபோன்ற நாடுகளுக்கும் தெரியும்வகையில் அமைந்து விட்டது. வளர்ந்தநாடுகளான ரஷியா, ஐரோப்பியஒன்றியம், சீனா ஆகியவைதங்களுக்கு என்று பிரத்தியேக புவி சார்இருப்பிட அமைப்பை தங்கள்நாடுகளில் பயன் படுத்தி வருகின்றன.

அமெரிக்காவின் ஜி.பி.எஸ் தவிரரஷ்யாவின் க்ளோனாஸ், ஐரோப்பியஒன்றியத்தின் கலிலியோ, சீனாவின்பெய்டோ ஆகிய இருப்பிடத்தை அறியும்செயற்கைக்கோள் அமைப்புகள்உள்ளன. எனவே இந்தியாவும் தனதுநாட்டின் பாதுகாப்பு மற்றும்வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த2017- ம் ஆண்டு ₹ 1470 கோடி செலவில்IRNSS 1-G செயற்கைகோளைவிண்ணில் ஏவி இந்தியாவிற்கு என்றுபிரத்தியேகமான பயன்பாடான NaviC எனப்படும் இருப்பிட பயன்பாட்டுமுறையை கொண்டுவந்தது.

 

இதன்மூலம் இந்தியா மற்றும்இந்தியர்கள் பிற நாட்டவர்களின்உதவியில்லாமல் தங்கள் நாட்டின்NAVIC தொழிநுட்பத்தை பயன்படுத்து 5 மீட்டர் அக்குரஸி உடன் 1500 கிலோமீட்டர் தொலைவை கடக்கலாம்எனும் மிக பெரிய சாதனையை இந்தியவிண்வெளி ஆராய்ச்சி மையமானஇஸ்ரோ நிகழ்த்தியது. அமெரிக்காவின்தயாரிப்பான GPS அக்குரஸி 20-30 மீட்டர் ஆகும்.

அதனைதொடர்ந்து நாடுமுழுவதும்NAVIC பயன்படுத்துவது குறித்தும், அதனை நடைமுறை படுத்துவதுகுறித்தும் அதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்தும் மத்திய அரசுஆராய்ந்து வந்தது, தற்போது அதில்அதிரடி முடிவினை எடுத்துள்ளார்மோடி, வருகிற 2020 – ஆண்டில்இருந்து இந்தியாவில் அனைத்துசெயல்பாடுகளும் செல்போன், மேப், போக்குவரத்து, கடல் பயணம், விமானப்பயணம், இராணுவபயன்பாடு உள்ளிட்ட அனைத்திலும்நமது தயாரிப்பான NAVIC செயல்பாட்டிற்கு வர இருப்பதாகதெரியவந்துள்ளது.

 

ஒருநாடு வல்லரசு ஆவதற்கு முன்புமற்ற நாடுகளின் உதவியின்றிஅனைத்திலும் தன்னிறைவுபெறவேண்டும் அதனை கருத்தில்கொண்டு தற்போது மத்திய அரசுஅதிரடியாக பல மாற்றங்களை செய்துவருகிறது. தற்போது மத்திய அரசின்இந்த திட்டத்தால் நாடு பாதுக்காப்புஅடைவது மட்டுமல்லாமல், ஆண்டிற்கு$45 மில்லியன் டாலர் பணம்மிச்சமாகும் என்றும் அதுஇந்தியாவிற்கு கிடைக்கும் என்றும்கணக்கிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அதிரடியை தொடர்ந்துநமது செல்போன் முதல் அனைத்திலும்இனி இந்தியாவின் தயாரிப்பான NAVIC இடம்பெறும் ஒவ்வொரு இந்தியர்களும்பெருமை படக்கூடிய நிகழ்வு இது.

நாமும் வாழ்த்துவோம் ஒருஇந்தியனாக.







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive