ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கு மட்டுமே தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - ஆணை வெளியீடு - புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரின் செயல்முறைகள், நாள்: 24-02-2025
ஆதிதிராவிடர் நலத்துறையில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு அவசியம் என்பதை மேற்கோள்காட்டி டெட் முடித்தவர்களுக்கு மட்டுமே தற்காலிக பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டது.
மேற்காணும் நீதிமன்ற தீர்ப்பாணை வெளியிடப்பட்ட நாளான 02.06.2023-க்கு பின் வழங்கப்படும் பதவி உயர்வு அனைத்திற்கும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும், மேற்படி மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பாணையினை எதிர்த்து அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் SLP வழக்கு தொடரப்பட்டு நாளதுவரையில் நிலுவையில் உள்ளது.
பார்வை 5-இல் கண்ட தீர்ப்பாணையின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப பள்ளிகளில் பணிபுரிந்துவரும் இடைநிலை ஆசிரியர்களில் 01032022 அன்றைய நிலையில், தேர்ந்தோர் பட்டியலில் கண்டுள்ள 12 விகிதாச்சாரத்தில் 19 நபர்களில் உஎண். 1 முதல் 5 வரையிலான இடைநிலை ஆசிரியர்களான 1 செல்வி.Cயுனிதா, 2. திருமதி.பொ.சுப்புலட்சுமி, 3 திரு.AR.மூக்கையா, திரு.N.அகிலன் ஆகியோர்கள் மட்டுமே ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் 4. திருமதிராயுவனேஸ்வரி மற்றும் 5 பணியிடத்தில் தற்போதைய பதவி உயர்வுக்கு தகுதி பெற்றவர்கள் ஆவர்.
எனவே, பார்வை 4ல் கண்ட 17.022025 நாளிட்ட மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பாணையினை நடைமுறைப்படுத்தும் பொருட்டும், பார்வை 8 மற்றும் பார்வை9 இல் காணும் கடிதங்களில் கண்டுள்ள அறிவுரைகளின் அடிப்படையிலும் மேற்கண்ட வரிசை எண் 1 முதல் 5 வரை உள்ள இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் கீழ்க்கண்டுள்ளவாறு தற்காலிகமாக தலைமையாசிரியராக பதவி உயர்வு அளித்து ஆணையிடப்படுகிறது.