இனி அனைத்து நலத்திட்டங்களும் EMISல் பதிவாகி உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு மட்டுமே - பள்ளிக்கல்வித்துறை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, December 7, 2022

இனி அனைத்து நலத்திட்டங்களும் EMISல் பதிவாகி உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு மட்டுமே - பள்ளிக்கல்வித்துறை

  IMG-20221206-WA0005

  அனைத்து வகை அரசு / அரசு உதவி / பகுதி நிதி உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கல்வி தகவல் மேலாண்மை மையத்திடமிருந்து ( EMIS ) பெறப்பட்டு இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.

 இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் 2023-2024 கல்வியாண்டிற்கு அனைத்து வகை நலத்திட்டங்களும் மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டியுள்ளதால் முதன்மை கல்வி அலுவலர்கள் இதன் மீது தனி கவனம் செலுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையினை சரிபார்த்து அதில் வேறுபாடு இருப்பின் அதனையும் EMIS - இல் 16.12.2022 - க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

இனி வருங்காலங்களில் முதன்மை கல்வி அலுவலரால் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த நலத்திட்டங்களுக்கான தேவைப்பட்டியலாக ( Indent ) எடுத்துக்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை  தெரிவித்துள்ளது.

Post Top Ad