திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: அன்புடைமை
குறள் எண் : 80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
பொருள்:
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.
பழமொழி :
Time stoops to no man's cure.
காலம் யார் கணிப்புக்கும் அடிபணியாது
இரண்டொழுக்க பண்புகள் :
1. உலகின் மிக சிறந்த வைரம் நல் எண்ணங்கள்.
2. வைரம் நமக்கு போதிப்பது உறுதியாக இருந்தால் மட்டுமே ஒளிர முடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருப்பேன்
பொன்மொழி :
ஒரு கல்லில் விழும் ஒவ்வொரு அடியும் அந்தக் கல்லை எப்படி ஒரு அழகிய சிலையாக மாற்றுகிறதோ அதுபோல் தான் நம் ஒவ்வொரு பிரச்சனைகளும் நம்மை செதுக்குகின்றன
பொது அறிவு :
1. ஒரு மின்னலின் சராசரி நீளம் தெரியுமா?
6 கிலோமீட்டர் .
2.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது?
அலகாபாத்.
English words & meanings :
chews - gnaws with teeth. verb. மெல்லுதல்.verb. வினைச் சொல். choose - to select. தேர்ந்தெடுத்தல்
noun.
noun.
ஆரோக்ய வாழ்வு :
ஒரு முட்டையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கோலின் நல்ல அளவு உள்ளது, இது உயிரணு சவ்வை உருவாக்குகிறது மற்றும் மூளையில் சமிக்ஞை மூலக்கூறை உருவாக்குவதில் பங்கு வகிக்கிறது. அதேபோல, முட்டையின் மஞ்சள் பகுதி லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் மூலம் செறிவூட்டப்படுகிறது. இது உங்கள் கண்ணைப் பாதுகாக்கிறது மற்றும் கண்புரை அபாயத்தையும் குறைக்கிறது. எனவே ஆரோக்கியமான மூளை மற்றும் கண்களைப் பெறுவதற்கு, வேகவைத்த முட்டைகளை சாப்பிடுங்கள்.
NMMS Q
மின் சுற்றில் செல்லும் மின்னோட்டத்தைக் கண்டறியப் பயன்படும் கருவி _________
விடை: அம்மீட்டர்
நீதிக்கதைa
இரண்டு தேவதைகள்!
நயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது,
அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தது. தேவதைகள் இருவரும்
அந்தப் பறவையைப் பார்த்து அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்க
வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் என்று இரு
தேவதைகள் பேசிக்கொண்டனர்.
அது நீராடுகிற காட்சியைப் பார்ப்பதற்கு யோகம் செய்தவர்களாக இருக்கிறோம், என்று பெருமைப்பட்டு கொண்டனர்.
அனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் இருப்பதைப் பார்த்து நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது.
அந்த
நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர்
வேகமாகத்தை தாங்காமல் அனீலஸ் பறவை, தடுமாறியபடி நீரில் சிக்கிக்கொண்டது.
அதைக் கண்ட தேவதைகள் இருவரும் பயந்தனர்.
அதில்
ஒரு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே
காப்பாற்றுகிறேன்! என்றாள். உடனே மற்றொரு தேவதை, வேண்டாம். அனீலஸ்ஸை நானே
சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றாள்.
அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன்.
எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க
மாட்டேன்! என்று பிடிவாதமாகக் கூறியது.
இப்படியே
இரண்டு தேவதையும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில், கீச்...
கீச்... என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு
பார்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது.
தேவதைகளே!
உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள்
என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை
இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று
கொண்டிருக்கிறேன்! என்றது.
அதைக்
கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள்
போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு
கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்று வருத்தப்பட்டனர்.
நீதி :
பிறரை நம்புவதை விட நாம் நம்மை நம்பினால் வாழ்க்கையில் முன்னேரலாம்.
*
"தமிழகத்தில் இன்று வரை செயல்பாட்டில் உள்ள 108 அவசர உதவி வாகனங்கள் 1343.
அவற்றில், 300 வாகனங்கள் உயிர்காக்கும் அதிநவீன கருவிகள் பொறுத்தப்பட்டு
முழுமையான உயிர் காக்கும் வாகனங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது" என்று
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
* சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு: 2,529 பட்டதாரிகள் தேர்ச்சி.
* சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.
* வானிலை முன்னறிவிப்பு: டிச.10 வரை தமிழகம், புதுவையில் கனமழை மற்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு.
* அனைவருக்கும் உணவளிக்க வேண்டியது அரசின் கடமை - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.
*
நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நிலவை மிக அருகில்
புகைப்படங்கள் எடுத்த நிலையில் டிசம்பர்-11 ஆம் தேதி மீண்டும் பூமிக்கு
திரும்பவுள்ளது.
* கூச் பெஹர் கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அடுத்த சுற்றுக்கு தகுதி.
* ஐசிசி டெஸ்ட் பேஸ்ட்மேன் தரவரிசை : ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசேன் முதல் இடத்திற்கு முன்னேற்றம்.
* உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி வென்று அசத்தல்.
* முதலாவது டிவிசன் ஹாக்கி லீக்: ஆர்.வி.அகாடமி அணி வெற்றி.
Today's Headlines
The number of emergency vehicles 108 in operation in Tamil Nadu is 1343.
Prepared by
Covai women ICT_போதிமரம்