பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிகட்டு நடந்த அனுமதி - தமிழகஅரசு செய்தி வெளியீடு ! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, December 23, 2020

பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிகட்டு நடந்த அனுமதி - தமிழகஅரசு செய்தி வெளியீடு !


பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிகட்டு நடந்த அனுமதி - தமிழகஅரசு செய்தி வெளியீடு !
 
ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்க , தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்திலிருந்து அந்த வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியோடு பங்கு பெற்று வருகின்றனர் . நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு , 2017 முதல் ஜல்லிகட்டு நடத்தப்பட்டு வருகிறது . ஜல்லிகட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் நேரடியாக கலந்து கொள்வது மட்டும் அல்லாமல் , பொதுமக்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியாகும் . ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் , தற்போது கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக , எதிர்வரும் 2021 - ஆம் ஆண்டில் , ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது , 

 
* ஜல்லிக்கட்டு , மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது . * எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது . * மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கேற்ப ( Total Capacity ) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் , அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது . பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை ( ( Thermal Scanning ) செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள் . ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கோவிட் 19 தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும் . * மேலும் , நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது . இதற்கான விரிவான , நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் .  
செய்தி வெளியீடு எண் : 992 
நாள் : 23.12.2020 செய்தி வெளியீடு 

Post Top Ad