"பி.எட். சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்" தமிழக அரசு அறிவிப்பு ! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, December 2, 2020

"பி.எட். சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்" தமிழக அரசு அறிவிப்பு !


 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஒரு முக்கிய குறிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2020-2021 -ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலைக் கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பத்தை, மாணவர்கள் www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். SC மற்றும் ST மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதும்.

மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது, தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை www.tngasaedu.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும், 044-22351014, 044-22351015 மற்றும் 044-28278791 என்ற எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், care@tngasaedu.org மற்றும் tndceoffice@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலுல் வரும் 4 -ம் தேதி முதல் 10-ம் வரை தகவல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad