இந்த உணவுகளை சேர்த்து உண்ணாதீர்கள், உங்கள் உடலுக்கு மிகவும் ஆபத்து!

இந்த உணவுகளை சேர்த்து உண்ணாதீர்கள், உங்கள் உடலுக்கு மிகவும் ஆபத்து!

நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும். அல்லது கேடு விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி வாழ்கிறார்கள்.
ஆயுர்வேதம் என்பது நமது உடலில் சக்தி தரும் புள்ளிகளை தூண்டி நமது ஆரோகியத்தை வளப்படுத்துவதான். ஆகவே ஆயுர்வேதத்தை நாம் தாரளமாக நம்பலாம்.
அவ்வாறு இரு வேறு உணவுப் பொருட்கள் ஒரே குணத்தைப் பெற்றிருந்தால் சில சமயங்களில் அவை குறிப்பிட்ட தோஷத்தை உடலில் உண்டு பண்ணும். அத்தகைய இரு பொருட்களை சேர்த்து உண்ணக் கூடாது. எடுத்துக்காட்டாக மீன் மற்றும் முள்ளங்கியை சொல்லலாம். அதுபோல், ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்களை இரு உணவுப் பொருட்கள் பெற்றிருந்தால் அவ்ற்றையும் நாம் உண்ணக் கூடது. உதாரணத்திற்கு தேன் மற்றும் நெய். அவ்வாறான நாம் சாப்பிடக் கூடாத எதிரெதிர் உணவுப்பொருட்களைப் பற்றி காண்போம்.
பசலைக் கீரை மற்றும் எள் : பசலைக் கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். இவற்றிலுள்ல ஒரே பண்பு உடலில் தோஷம் உண்டு பண்ணுவதால் இத்தகைய பாதிப்புகள் உண்டாகிறது.



திப்பிலி மற்றும் மீன் : திப்பிலியுடன் மீன், அல்லது தேன் கலந்து சாப்பிட்டால் இறப்பு உண்டாகி விடுமாம். மீன் பொறித்த எண்ணெய் கூட திப்பிலியுடன் பயன்படுத்தக் கூடாது என ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.
துளசி மற்றும் பால் : நீங்கள் நுரையீரல் அல்லது சுவாச பாதிப்புகளுக்காக துளசி இருக்கும் கேப்ஸ்யூல் அல்லது துளசி சாறு அருந்தியிருந்தால் அடுத்த அரை மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாதாம்.
தேன் மற்றும் ஒயின் அல்லது சர்க்கரை : தேன் சாப்பிட்ட பிறகு ஒயினோ அல்லது இனிப்பு உணவுகளோ சாப்பிடக் கூடாது. இதனால் சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகக் கூடும்.
சில உணவுகளுக்குப் பின் பால் : முருங்கை, முள்ளங்கி, மற்றும் பூண்டு உணவுகளை சாப்பிட்ட பின் பால் அருந்தக் கூடாது. இதனால் சரும அலர்ஜிகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.



பால் மற்றும் புளிப்பாக பழங்கள் : எலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு , மாதுளை போன்ற புளிப்பான பழங்களுடனோ அல்லது அவற்றை சாப்பிட்டவுடனோ பால் குடித்தால் ஜீரண சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.
வாழைப்பழம் மற்றும் மோர் : மோருடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவது கூடவே கூடாது. இவை உடலில் தோஷத்தை உண்டாகும் வாய்ப்புகளை உண்டாக்கிவிடும்.
இறைச்சி மற்றும் விளக்கெண்ணெய் விளக்கெண்ண்யில் சமைத்த இறைச்சி உடலில் செரிமானமட்டுமல்லாது வயிறு சம்பந்தமான கோளாறுகளை உண்டாக்கிவிடும்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive