Trb - பேராசிரியர் பணியில் சேர்வதற்கான அனுபவ சான்றிதழுக்கு கல்லுாரிகளில் வசூல் வேட்டை!
அரசு கல்லுாரிகளில், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான அனுபவ சான்றிதழுக்கு, ஆயிரக்கணக்கில் பணம் வசூலிப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில், 2,331 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவுக்கு, 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு, கல்வி தகுதி மற்றும் பணி அனுபவத்துக்கு, தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகள், தாங்கள் பணியாற்றும் மற்றும் பணியாற்றிய கல்லுாரிகளில், அனுபவ சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த சான்றிதழ் தருவதற்கு, கல்லுாரிகள் தரப்பில், ஆயிரக்கணக்கான ரூபாய் நன்கொடை கேட்பதாகவும், மறைமுக கட்டணம் செலுத்தவும் வற்புறுத்தப்படுவதாக, புகார்கள் எழுந்துள்ளன.
சில அரசு கல்லுாரி முதல்வர்கள் மற்றும் கல்லுாரி இணை இயக்குனர் அலுவலகங்களிலும், சில தனியார் கல்லுாரி முதல்வர் அலுவலகங்களிலும், வசூல் வேட்டை நடப்பதாக, பட்டதாரிகள் குமுறுகின்றனர். இதைத் தடுக்க, உயர் கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
0 Comments:
Post a Comment