மாதத்தில் ஒரு நாள் கதர் அணிய உத்தரவு
புதுடில்லி : 'மாதத்தில் ஒரு நாள், ஆசிரியர்களும், மாணவர்களும், கதர் ஆடை அணிய வேண்டும்' என, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் செயலர், அனுராக் தாக்குர், டில்லியில் கூறியதாவது:மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த ஆண்டை கொண்டாடும் நாம், அவரது கனவை நிறைவேற்றும் வகையில், பள்ளிகளில் மாதத்துக்கு ஒருநாள், கதராடை அணியும் தினம் கடைப்பிடிக்க வேண்டும் என, சி.பி.எஸ். இ., பள்ளிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதை பள்ளிகள் தாங்களாக செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார். 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் ஓராண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், தேசிய சுகாதார கமிஷன், டில்லியில், 'ஆரோக்கிய மந்தன்' என்ற பெயரில், ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்றார்.அவர் பேசுகையில், ''ஆயுஷ்மான் பாரத்' திட்டம், நாடு முழுவதிலும், மக்களின் மருத்துவத்தை உறுதி செய்கிறது. ''இதற்கு முன் இது, சாத்தியமற்றதாக இருந்தது. கடந்த ஓராண்டில், 50 ஆயிரம் பேர், இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர்,'' என்றார்.
0 Comments:
Post a Comment