ஒருமுறை பயன்பாட்டிலுள்ள பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம்

ஒருமுறை பயன்பாட்டிலுள்ள பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம்


பிளாஸ்டிக் இல்லாத உலகம் உருவாக்குவோம், எதிர்கால சந்ததியருக்கு சிறந்த சுற்றுச்சூழலை உருவாக்குவோம்’ என, திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி காந்தி வேடம் அணிந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்களிடையே நூதனமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஒருமுறை பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக்கை தவிர்ப்பது தொடர்பாக, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளி வளாகத்தில் இருந்த பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்களை சேகரித்தனர். வரும் காலங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், கொண்டு வரவும் வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டது.




பின், ‘ஒருமுறை பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம்; வீடு, அலுவலகம் மற்றும் பொது இடங்களில் இவற்றின் பயன்பாட்டை தவிர்ப்போம்

பிளாஸ்டிக் இல்லாத உலகம் உருவாக்க ஒத்துழைப்போம்; எதிர்கால சந்ததியருக்கு நல்ல சுற்றுச்சுழலை உருவாக்குவோம்’ என, உறுதிமொழி ஏற்றனர்

மக்கும் குப்பை மக்காத குப்பையினை பிரித்து குப்பை தொட்டிகளில் போட்டனர்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி வரவேற்றார். முன்னாள் கிராம கல்விக்குழு தலைவர் முத்துச்செல்வம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிவண்ணன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனரும் யோகாசன ஆசிரியருமான விஜயகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள். நிறைவாக பள்ளி உதவி ஆசிரியர் புஷ்பலதா நன்றி கூறினார்








0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive