சோப்பு போட்டு கை கழுவினால் கொரோனா இறந்துவிடுமா?

சோப்பு போட்டு கை கழுவினால் கொரோனா இறந்துவிடுமா?

ஆமாம்... இறந்துவிடும்.

பெரும்பாலான வைரஸ்கள் மூன்று பொருட்களால் ஆனதே.

*ஆர்.என்.ஏ (RNA)

*ப்ரோடீன்கள்

*லிப்பிடுகள்

இந்த லிப்பிடுகள் கொழுப்பால் ஆனவை. இதுவே வைரஸ்சின் வெளி அடுக்கு ஆகும். இதன் உள்ளே தான் RNA இருக்கும். அது மட்டுமின்றி, இந்த லிப்பிடுகள் தான், நம் கையில் ஒட்டிக்கொள்ள காரணமாக இருக்கிறது.


நீங்கள் சோப்பு போட்டு கை கழுவும்போது, சோப்பு லிப்பிடுகளைக் கரைத்து விடும். அதற்குமேல் வைரஸ் உங்கள் கைகளில் தங்க முடியாது. லிப்பிடுகள் இன்றி வைரசும் வாழ முடியாது.

லிப்பிடுகள் கரைய 20 வினாடிகள் வரை பொதுவாக ஆகும். 20 வினாடிகள் சோப்பு போட்டு கையை கழுவினால் மொத்த கொரோனாவும் க்ளோஸ்.


பின்குறிப்பு: வைரஸ் எனபது ஒரு உயிர் உள்ள கிருமி என்று சொல்லிவிட முடியாது. அது இன்னொரு வாழும் உயிரினத்தின் மேல் இருக்கும்போது மட்டுமே உயிருடன் இருக்கும். மற்றபடி அது உயிரற்ற ஆர்கானிக் கூறுகள் அவ்வளவே.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive