ஜாக்டோ ஜியோ முதல்வருடன் சந்திப்பு!

ஜாக்டோ ஜியோ முதல்வருடன் சந்திப்பு!
திருவாரூரில் தமிழக முதல்வருடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் சந்திப்பு. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தல்.  

திருவாரூர் வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமியை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அதனுடைய பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் தலைமையில் கூட்டணி நிர்வாகிகள் சந்தித்தனர்.

அப்போது காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

மேலும் கடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். அதுபோல் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களை மெட்ரிக் பள்ளிகளில் படிப்பதற்கு வழங்கப்படும் அரசின் நிதிஉதவியை நிறுத்தி, அந்நிதியினை கொண்டு அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட முதல்வர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive