அருகமைப் பள்ளிகளே ஆரோக்கியமான கல்விச் சூழலைக் கொடுக்கும்!

அருகமைப் பள்ளிகளே ஆரோக்கியமான கல்விச் சூழலைக் கொடுக்கும்!


சிவபாலன் இளங்கோவன்

தனது மகனைப் பதினொன்றாம் வகுப்பில் சேர்த்ததற்குப் பிறகு அவனது மதிப்பெண்கள் குறையத் தொடங்கிவிட்டதாகவும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி பள்ளி செல்வதையே தவிர்ப்பதாகவும், சகமாணவர்களிடம் எப்போதும் ஏதேனும் பிரச்சினையில் ஈடுபடுவதாகவும் இன்னும் நிறைய புகார்களை அந்தத் தாய் சொன்னதும் அவரது மகனிடம் பேசினேன். அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமாய் இருந்தது பள்ளியின் தொலைவு.

வீட்டிலிருந்து அவனது பள்ளி கிட்டத்தட்ட 15 கிமீ தொலைவில் இருக்கிறது. மிகச் சிறந்த பள்ளியில் படிக்க வைக்க வேண்டுமென அவனது பெற்றோர் புறநகர் பகுதியில் உள்ள பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். நகரத்தின் மையத்திலிருந்து புறநகருக்கு நெருக்கடியான போக்குவரத்து நேரத்தில் 15 கிமீ பயணிப்பது சுலபமானது அல்ல. ஒரு சிறுவனைப் படிப்பின் நிமித்தமாகத் தினமும் நீண்ட தூரம் பயணிக்க வைப்பது நிச்சயம் ஆரோக்கியமற்றது. இத்தனைக்கும் அவனது வீட்டுக்கு அருகிலேயே நிறைய பள்ளிகள் இருக்கின்றன.

கௌரவக் குறியீடாக மாறிய கல்வி

இன்றைய பெற்றோர்களைப் பொறுத்தவரையில் எந்தப் பள்ளியில் தனது குழந்தைகள் படிக்கிறார்கள் என்பது அவர்களுக்கான கௌரவக் குறியீடாகக் கருதுவதாக நினைக்கிறேன். தனது குழந்தை நகரத்திலேயே மிகச் சிறந்த பள்ளிக்கூடத்தில் படிக்கிறான் என்ற ஒரு அற்ப பெருமிதத்துக்காக அந்தப் பள்ளி எவ்வளவு தொலைவாக இருந்தாலும் குழந்தைகளைப் பற்றி யோசிக்காமல், நீண்ட தூரம் அவர்களை அனுப்பும் பெற்றோர்களை எனக்குத் தெரியும். அவர்களைக் கேட்டால் மிக அலட்சியமாக “அந்த ஸ்கூல்ல அட்மிஷன் கிடச்சதே பெரிய விஷயம் சார்” என்பார்கள்.

உண்மையில் இங்கு பொறுத்துக்கொள்வது குழந்தைகள்தானே? ‘உன்னால் இவ்வளவு தொலைவு பயணித்து அந்தப் பள்ளிக்குச் செல்ல முடிகிறதா?’ என்று அவர்களிடம் எப்போதாவது கேட்டிருக்கிறோமா? நல்ல பள்ளி என்பதற்கு நாம் கொண்டிருக்கும் கற்பிதங்களுக்காகக் குழந்தைகளைக் கஷ்டப்படுத்துவதோ அல்லது கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்ளச் சொல்வதோ எந்த வகையில் நியாயமானது?

கல்வியின் நிமித்தம் நமது குழந்தைகளின் மீது நாம் திணிக்கும் எதிர்பார்ப்புகள், நிர்ப்பந்தங்கள், அதன் விளைவாக அவர்களுக்கு ஏற்படும் அலைச்சல்கள், நெருக்கடிகள், மனவுளைச்சல்கள் பற்றி நாம் எந்தவிதக் கவலைகளும் இல்லாமல் இருக்கிறோம். மதிப்பெண்களைப் பிரதானமாகக் கொண்ட கல்விமுறையில் நாம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும் எனும் அவலத்திலிருந்து விடுபடுவது குறித்து நாம் யோசிக்க வேண்டும்.

கல்வி தொடர்பாகக் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஏராளமான உளவியல் ஆராய்ச்சிகள் ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. குழந்தைகளின் கல்வித்திறன் என்பது கற்கும் சூழலோடு நேரடித் தொடர்புடையது. கற்கும் சூழல் குழந்தைகளுக்கு இலகுவானதாகவும் சாதகமானதாகவும் அவர்களின் வளர்ச்சியை அரவணைப்பதாகவும் இருக்க வேண்டும். அதேபோல, கல்வி என்பது மாணவரின் திறனைப் பரிசோதனை செய்வது என்ற அளவில் மட்டுமில்லாமல் அது மாணவர்களுடன் ஒரு தொடர் உரையாடலை நிகழ்த்த வேண்டும்.

ஒரு மாணவனுக்கு மொழியியல், மானுடத் திறன்களை வளர்ப்பது, உயர்ந்த பண்புகள், ஒழுக்கம் சார்ந்த விழுமியப் பார்வைகளை ஏற்படுத்துவது என்பதெல்லாம் கல்வியின் முதன்மை இலக்குகளாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கல்விச் சூழலைக் கொண்டே ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை உருவாக்க முடியும். இப்படியான கல்விச் சூழலை உருவாக்காத வரை கல்வி என்பது அவர்களுக்குச் சுமையானதாகத்தான் இருக்கும் என்கின்றன ஆய்வுகள். இத்தகைய ஆரோக்கியமான கற்கும் சூழலில் அருகமைப் பள்ளிகள் எனும் அம்சமும் முக்கியமான பங்கு வகிக்கின்றன.

அருகமைப் பள்ளிகளும் சமூக இணக்கமும்

“அருகமைப் பள்ளிகளை உருவாக்குவதன் வழியாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் பல்வேறு மொழி, இன, மத, சாதிப் பின்னணியைச் சார்ந்தவர்களை ஒரே வகுப்பறையில் அமரவைக்க முடியும். அப்போது வகுப்பறை என்பது அந்தப் பகுதியின் வேறுபட்ட பின்னணியைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணையும் இடமாக இருக்கும்.

இதன் வழியாக மொழி, மத, சாதிரீதியான பிரிவினைகளுக்கு இடையேயான இணக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த முடியும். வகுப்பறையில் ஏற்படும் இந்த இணக்கத்தை சமூகத்துக்கு மிக எளிதாகக் கடத்த முடியும். ஒரு மேம்பட்ட சமூக இணக்கத்தையும் சகிப்புத்தன்மையும் நாம் அருகமைப் பள்ளிகளை உருவாக்குவதன் வழியாகத் திட்டமிடலாம்” என்கிறார் கோத்தாரி.

அருகமைப் பள்ளிகளுக்கான வரையறையாக ஆரம்பப் பள்ளிகள் ஒரு கிமீ-க்குள்ளும், நடுநிலைப் பள்ளிகள் மூன்று கிமீ-களுக்குள்ளும், மேல்நிலைப் பள்ளிகள் ஐந்து கிமீ-களுக்குள்ளும் இருக்க வேண்டும் என்று தெளிவாக இதற்கான திட்டத்தை முன்மொழிந்து சென்றிருக்கிறார் கோத்தாரி.

2009-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டத்துக்குப் பிறகுதான் கோத்தாரி ஆணையத்தின் அருகமைப் பள்ளிக்கான பரிந்துரைகளைப் பின்பற்ற அனைத்து தனியார் பள்ளிகளும் அறிவுறுத்தப்பட்டன.

இந்தச் சட்டத்தில், தனியார் பள்ளிகளுக்கு இன்னொரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அதாவது ஏழை எளிய, விளிம்புநிலை, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அவர்களின் அருகில் இருக்கும் பள்ளிகளில் 25% இடங்கள் கொடுக்க வேண்டும். இந்த 25% இடங்களுக்கு மட்டும் அருகமைப் பள்ளிகளுக்கான பரிந்துரைகளைத் தனியார் பள்ளிகள் முழுமையாகக் கடைப்பிடிக்கின்றன.

இந்தச் சட்டத்தின் வழியாகத் தங்களது பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றால், குழந்தையின் வசிப்பிடம் பள்ளியிலிருந்து ஒரு கிமீ-க்குள் இருக்க வேண்டும் என்பதை ஒரு வடிகட்டும் வழியாகத்தான் தனியார் பள்ளிகள் பின்பற்றுகின்றன. மிச்சமிருக்கும் 75% இடங்களில் இந்தப் பரிந்துரைகள் பின்பற்றப்படுவதில்லை.

நெருக்கடியில்லா சூழல் வேண்டும்

2007-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் செயல்படாத பள்ளிகள் மூடப்பட்டன. அந்தப் பள்ளியில் படித்துவந்த மாணவர்கள் நீண்டதூரப் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அப்படி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்ட மாணவர்களிடம் ஒரு ஆய்வு செய்யப்பட்டது.

அந்த ஆய்வில் நீண்டதூரப் பள்ளிக்கு மாற்றப்பட்ட மாணவர்களில் இருபது சதவீதத்தினர் மேற்படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டதாகவும், மிச்சமிருக்கும் மாணவர்களின் படிக்கும் திறன் குறைந்திருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல் மாணவர்களிடையே ஏராளமான குழுச் சண்டைகளும், மோதல்களும் நிகழ்வதாகவும் ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.

இந்த ஆய்வில் கிடைக்கப்பட்ட படிப்பினைகளைக் கொண்டு கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் அமெரிக்கா முழுவதும் பள்ளிகள் மூடப்படுவதைக் கண்டித்து கல்வியாளர்கள் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். இங்கும்கூட நிறைய அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இப்படி மூடப்படும் பள்ளிகள் பொதுவாகவே தொடக்கப் பள்ளிகளாகவே இருக்கின்றன. பள்ளிகள் ஒருங்கிணைப்பு என்ற பெயரில் தொடக்கக் கல்வி பயிலும் சிறுவர்களை அருகே உள்ள ஊருக்கு அனுப்பும் நிலைதான் கிராமப்புறங்களிலும் இருக்கின்றன.

ஏராளமான அலைச்சல், அது தரும் மனவுளைச்சல், காத்திருப்பு, நெரிசல் பேருந்துப் பயணம், தினமும் காலையில் எழுந்தவுடன் நேரத்துக்குப் பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் என்று இது தரும் நெருக்கடிகள் ஏராளம். காலையில் எந்தப் பரபரப்புமின்றி, மிக சாவகாசமாக எழுந்து வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் பள்ளிக்கு நடந்தே செல்லும் ஒரு மாணவனுக்கு நிச்சயம் அந்தப் பள்ளி எந்தவித நெருக்கடியையும் கொடுக்காது.

இலகுவான கல்விச் சூழலை அருகமைப் பள்ளிகளின் வழியாக நமது குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்படியான கல்விச் சூழல்தான் ஆரோக்கியமான வளர்ச்சியை நமது குழந்தைகளுக்குக் கொடுக்கும்.

- சிவபாலன் இளங்கோவன்,
மனநல மருத்துவர், ‘நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா?’ நூலாசிரியர்.
தொடர்புக்கு: sivabalanela@gmail.com




நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம்?- மத்திய அமைச்சர் விளக்கம் !

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம்?- மத்திய அமைச்சர் விளக்கம் !



நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் சாத்தியமா என்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம் அளித்துள்ளார்.


இதுதொடர்பாக மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், ''என்சிஇஆர்டியால் உருவாக்கப்பட்ட தேசிய பாடத்திட்ட உருவாக்கம், ஒவ்வொரு பள்ளியும் தனது பாடத்திட்டத்தையும் பாடப் புத்தகங்களையும் எப்படி உருவாக்கவேண்டும் என்ற விதிமுறைகளை வகுத்துள்ளது.

கல்வி அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் (மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல் இரண்டிலும் இருப்பது) வருகிறது. நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பள்ளிகள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகின்றன. இதனால் பள்ளிகளின் பாடத்திட்டங்களை அந்தந்த மாநிலங்களோ அல்லது யூனியன் பிரதேசங்களோ முடிவு செய்துகொள்கின்றன.

இதனால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தைக் கொண்டுவருவது சாத்தியமில்லை. மாநிலக் கல்வித் துறைகளும் எஸ்சிஇஆர்டிகளும் என்சிஇஆர்டிகளின் பாடத்திட்டத்தையோ, புத்தகங்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அவர்களுக்காக சொந்தப் பாடத்திட்டத்தையும் உருவாக்கிக் கொள்ளலாம். இது அவர்களின் சொந்தத் தேவையைப் பொறுத்தது.

எனினும் அந்தப் பாடத்திட்டங்கள் இந்தியாவின் சுதந்திரப் போராட்டங்களையும் அரசியலமைப்பின் அடிப்படைக் கடமைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதேபோல கலாச்சாரப் பாரம்பரியங்கள், சமத்துவம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை, பாலின சமத்துவம், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், சமூகத் தடைகளை நீக்குதல் மற்றும் விஞ்ஞான மனநிலையைத் தூண்டுதல் ஆகியவையும் பாடத்திட்டத்தில் இருக்கவேண்டும்'' என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.




G.O NO: 72 - மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் 3ஆம் தேதி சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் - ஆணை..


G.O NO: 72 - மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் 3ஆம் தேதி சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் - ஆணை..




Flash News : NTSE Nov 2019 - Final Key Answers Published!

Flash News : NTSE Nov 2019 - Final Key Answers Published!

Flash News : கணினி ஆசிரியர்களுக்கு டிச.5 வரை அவகாசம்!!

Flash News : கணினி ஆசிரியர்களுக்கு டிச.5 வரை அவகாசம்!!

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெற்ற ஆசிரியர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய டிச.5 தேதி வரை அவகாசம் நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. இந்த அவகாசம் இனிமேல் நீட்டிக்கப்படாது எனவும் அறிவிப்பு.



பருவ மழை காரணமாக அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பருவ மழை காரணமாக அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Group 2 தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த சுபாஷிணி - தந்தை பள்ளி ஆசிரியர், தாய் Beo

Group 2 தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த சுபாஷிணி - தந்தை பள்ளி ஆசிரியர், தாய் Beo

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை - 583 காலியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கலாம்!!

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை - 583 காலியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கலாம்!!



Online Submission of Application Form for NEET (UG) - 2020 will be available from 04:00 pm on 02.12.2019

Online Submission of Application Form for NEET (UG) - 2020 will be available from 04:00 pm on 02.12.2019


IMPORTANT DATE FOR NEET

APPLY Click Here 

நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - என்.டி.ஏ

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என என்.டி.ஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எய்ம்ஸ், ஜிப்மர், தனியார் மருத்துவக் கல்லூரிகள், அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகள், ஏ.எஃப்.எம்.சி, இ.எஸ்.ஐ.சி உள்ளிட்ட நாட்டின் அனைத்து மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கும் நீட் நுழைவுத்தேர்வு தேர்ச்சி என்பது அவசியம். வெளிநாட்டிலிருந்து மருத்துவம் தொடர விரும்பும் அனைவருக்கும் நீட் 2020 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வெளிநாட்டில் மருத்துவம் படிக்க தேவையான சான்றிதழ் பெற வேண்டும். 12 ஆம் வகுப்பு முடித்த இந்தியர்கள் அனைவரும் நீட் 2020 தேர்வு எழுத தகுதியுடையவர்கள்.

2020ஆம் ஆண்டு டிசம்பவர் 31 க்கு முன்னதாக அவர்களின் வயது 17 ல் இருந்து 25 க்குள் இருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல்/ பயோ டெக்னாலஜி ஆகிய பாடங்களை கணிதத்துடன் அல்லது ஆங்கிலத்துடன் எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்தை பயின்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பங்கள் அல்லது நீட் 2020க்கான பதிவு இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைனில் தொடங்கும். இதுகுறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளமான  ntaneet.nic.in -ல் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தகுதி, முக்கியமான தேதிகள், வயது வரம்பு விதிகள் மற்றும் பிற மாற்றங்களைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

நீட் நுழைவுத்தேர்வுக்கு www.nta.ac.in, ntaneet.nic.in என்ற இணையதளங்களில் டிசம்பர் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்த ஜனவரி 1 வரை தேசிய தேர்வு முகமை அவகாசம் அளித்துள்ளது. எம்.பி.பிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அடுத்தாண்டு மே 3ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.

பொதுப்பிரிவினருக்கு ரூ.1,500, ஒபிசி, பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ. 1,400 விண்ணப்பக்கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி, திருநங்கைகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்துடன் ஜி.எஸ்.டி சேவை கட்டணத்தையும் மாணவர்கள் செலுத்த வேண்டும். நீட் நுழைவுத்தேர்வுக்கான முடிவுகளை அடுத்தாண்டு ஜூன் 4ஆம் தேதிக்குள் வெளியிட தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்துள்ளது


Flash News : NEET MAY 2020 EXAM Notification Published!

Flash News : NEET MAY 2020 EXAM Notification Published!

Online applications are invited for National Eligibility-cum-Entrance Test (UG) – 2020 [NEET (UG) – 2020] to be
conducted by the National Testing Agency (NTA).

Section 14 of the National Medical Commission Act, 2019 provides for holding of a common and uniform National Eligibility-cum Entrance Test (NEET) for admission to the undergraduate medical courses in all medical institutions including those governed under any other law. Thus, the admission to MBBS course in AIIMS, New Delhi, JIPMER and
all AIIMS like institutions will also be made through NEET.

NEET (UG) – 2020 shall be conducted in 11 languages, including English and Hindi.

PATTERN OF TEST : The NEET (UG) – 2020 shall consist of one question paper containing 180 multiple choice questions (four options with single correct answer) from Physics, Chemistry and Biology (Botany & Zoology). The schedule of examination activities and other important information are as follows:

 Other Backward Classes (OBC) – Non Creamy Layer as per the Central list of Other Backward Classes available on
National Commission for Backward Classes (NCBC-Government of India website www.ncbc.nic.in).

The Information Bulletin containing detailed information regarding the Test, syllabus, eligibility criteria to
appear/admission, age, reservation, categorisation of seats, examination fee, cities of examination, State Code, etc. is available on website www.ntaneet.nic.in.

The candidates, who desire to appear in NEET (UG) – 2020, may check all the details in the Information Bulletin on
www.ntaneet.nic.in and apply for the same only online between 02.12.2019 (Monday) and 31.12.2019 (Tuesday).
The fees can be paid only online up to 01.01.2020 (Wednesday).

Senior Director
NEET (UG), NTA
EVENTS D

Important Dates

Date of Examination - 03 May 2020

Timing of Examination 02:00 pm to 05:00 pm - Duration of Examination 180 minutes (03 hours)

Mode of Examination Pen and Paper
Online Submission of Application Form (including uploading of
photograph and signature) - 02 December 2019 – 31 December 2019
(up to 11:50 pm)


தேர்தல் பணிக்கு Ifhrms மூலமாக விவரங்கள் சேகரிப்பு - ஆசிரியர், ஊழியர்களுக்கு சிக்கல்.

தேர்தல் பணிக்கு Ifhrms மூலமாக விவரங்கள் சேகரிப்பு - ஆசிரியர், ஊழியர்களுக்கு சிக்கல்.




தகவல்:

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் அவர்கள் உடல்நலம் பாதித்தவர்கள்
மாற்றுதிறனாளிகள் மகப்பேறு அரசு ஊழியர்கள் தமிழக உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழக அரசிடம் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறியாதவது:

வரவிருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த உள்ளனர். அதற்கான பணிகள் உள்ளாட்சி அலுவலகம் மூலம் தீவரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தும் வகையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (IFHRMS)இயங்கும் மாவட்ட கருவூலமாக அனைத்து அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பெயர் பட்டியலை பெற்று பணியாணை வழங்கப்பட உள்ளது.
இதற்கு முன்பு அந்தந்த துறை மூலமாக பெயர் பட்டியலினை பெற்று பணியில் ஈடுபடுத்துவது வழக்கம். ஆனால், இந்த முறை கைவிடப்பட்டுள்ளது.

இதில் என்ன பாதிப்பு என்னவென்றால், மாற்றுதிறனாளிகள், மருத்துவ சிகிச்சை பெருபவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பு அடைவார்கள்.
முன்பு துறை சிகிச்சை பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மருத்துவ சான்று வழங்கியும்,  மாற்றுதிறனாளிகள் உன்மை சான்று சமர்பித்தும், சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெற முடியும். ஆனால், தற்போது யாரை அணுகுவது என்பது பெரும் குழப்பமாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளது.  எனவே, தேர்தல் ஆணையம் உடல் நலம் பாதித்தவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்குமாறு சம்மந்தப்பட்ட துறை மூலம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Flash News : உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Flash News : உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு



டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்!” - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி

Thiruvalluvar University Recruitment 2019 | திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

Thiruvalluvar University Recruitment 2019 | திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.



*.THIRUVALLUVAR UNIVERSITY RECRUITMENT 2019 | திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

*.பதவி : PROFESSOR, ASSOCIATE PROFESSOR, PROFESSOR.

*.மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 11 .

*.விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.12.2019.

*.இணைய முகவரி : www.tvu.edu.in




5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்தாலும் தேர்ச்சி நிச்சயம் - அமைச்சர் செங்கோட்டையன்

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்தாலும் தேர்ச்சி நிச்சயம் - அமைச்சர் செங்கோட்டையன்

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும் மூன்று ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவர்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும் மூன்று ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவர்கள்.மூன்று ஆண்டுகளில் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும்.மூன்று ஆண்டுகளில் மாணவர்கள் தரம் குறித்து கண்காணிக்கப்படும்.அரசு பள்ளி தரம் குறைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளதால், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தேவைப்பட்டால் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும். காலை மாலை என்று இரு வேளைகளிலும் மாணவர்களுக்கு உற்பயிற்சி அளிக்கவும் மற்றும் வாரத்தில் ஒரு நாள் ஆங்கிலம் கற்றுத்தரவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.



'நீட்' நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது?

'நீட்' நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது?



எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அரசு ஒதுக்கீட்டிலும், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டிலும், நீட் தேர்வு அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.நடப்பு கல்வி ஆண்டுக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 3ல் நடக்கிறது.

இதற்கான, 'ஆன்லைன்' பதிவு இன்று துவங்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய தேர்வு முகமையின் முந்தைய அறிவிப்பில், இந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, நீட் தேர்வுக்கான விபரங்கள் இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப் படுகிறது.




வனக்காவலர் தேர்ச்சி பட்டியல் வெளியீடு

வனக்காவலர் தேர்ச்சி பட்டியல் வெளியீடு

தமிழகத்தில், வனக் காவலர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற, 465 பேரின் பட்டியலை, வனத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களுக்கான, ஆன்லைன் தேர்வு, அக்., முதல் வாரத்தில் நடந்தது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 1,692 பேர், சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் திறன் தேர்வுக்கு அழைக்கப் பட்டனர்.இவர்களுக்கான உடல் திறன் தேர்வுகள், வண்டலுார் உயிரியல் பூங்காவில், நவ., 26ல் நடந்தது. இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் முதலாவது பட்டியலை,வனத்துறை வெளியிட்டுள்ளது.

மொத்தம், 564 பணியிடங்களில்,465 பணியிடங்களுக்கு தேர்வானோரின் பட்டியலை வனத்துறை வெளியிட்டுள்ளது. இதில், 12 பேர் கூடுதல் விபரங்கள் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.




அரசுஅலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு ,பயனுள்ள தகவல்

அரசுஅலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு ,பயனுள்ள தகவல்

நமது மாத  சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...

பழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு....

நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத் தான்...

1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101

2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102

3 .Coimbatore # 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104

4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105

5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106

6 .Dindigul #Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja 7373703107

7 .Erode # Selvanayaki Complex, Room No.120, Near Collector Office, Perundurai Road, Teachers Colony Bus Stand, Erode - 638 011 Mr.Manikandan 7373703108

8. Kanchipuram #No.1,Ellapa Nagar, Opp.To Collector Office, Kanchipuram – 631501. Mr.Prabu 7373703109

9 .Kanyakumari # D,No 84, Lweisammal Street, W.C.C. Jn,Nagercoil, Kanyakumari District – 629001 Mr.Suresh Kumar 7373703110

10 .Karur #District Information Centre,District Collector Office,Karur-639005. Mr. Felix 7373703112

11 .Krishnagiri#  3/E11C,2Nd Floor, Opposite. Rayakottai Road, Flyover Near Hotel Sarvanabhavan, Krishnagiri-635001. Mr.Venkatesan 7373703113

12 .Madurai#  46,Thomas Complex Ii Nd Floor, Nethaji Road, Madurai – 625001. Mr.Palani 7373703114

13. Nagapattinam # No.8, Rajarani Complex, Room No.112, 2Nd Floor, Neela South Street, Nagapattinam-611 001 Mr. Veeramani 7373703164

14 .Namakkal # 14,Ii Nd Floor,Main Campus, Collectorate, Namakkal-637003. Mr.Bakkiaraj 7373703116

15 .Nilgiri (ooty) # 222, J, Sri Ram Nilayam Hospital Road,Udhagamandalam - 643 001 (Nilgiri - Ooty) Mr.Lokesh Kumar 7373703117

16 .Perambalur#  Ground Floor, Collector Office Campus, Perambalur (Dt), Pincode-621212 Mr.Balu 7373703118

17 .Pudukkotai # Shop No-33, Shri Bharathi Complex,East 2Nd Street, Pudukkotai - 622 001 Mr. Parimaleeswaran 7373703119

18 .Ramnathapuram# 1/11 Durai Raja Chattiral Steel, Nks Vappa Complex, Velipattinam Post Ramanathapuram 623504 Rr Sethupathi Nagar, Ramanathapuram. Mr.Usman Ali 7373703123

19 .Salem#  No : 23 / 7 , 1st Floor, Maravaneri 1st Cross, Near Sundar Lodge Auto Stand, Salem – 636 007. Mr.Jameer 7373703124

20 .Sivagangai # District Collectorate, 1st floor District Treasury office, Sivagangai, 630561 Mr.Balaji 7373703125

21 .Thanjavur #Survey No.163/4, Second Floor, Door No.10, Natarajapuram North, Municipal Colony Bus Stop, Medical College Main Road, Thanjavur - 613 004 Mr.Kalaimani 7373703126

22 .Theni # L1/786, Gandhiji Road, Zameendar Complex 1St Floor, Near Theni Bus Stand, Theni-625531 Mr.Sarfraz 7373703127

23 .Thiruvallur # 36/75,Tnhb, Old Collector Office Road,Thiruvallur-602001 Mr.Karthick 7373703128

24 .Thiruvannamalai # No: 16/2 R.V.Complex, Gandhi Nagar Byepass, Tiruvannamalai-606 601 Mr.Fayaz Ahmed 7373703135

25. Thiruvarur # 49, Kamalayam, North Bank, Thiruvarur - 610001 Mr. Vivekanandhan 7373703136

26. Tirunelveli#  4F6/11 Akm Complex, Kailasapuram Middle Street, Tirunelveli – 627001 Mr.Ramasamy 7373703132

27 .Tiruppur # 284,Kumaran Plaza,Kumaran Road Tirupur-641601. Mr.Murugan 7373703133

28 .Trichy # No.22/7, 1St Floor, M.N.S. Complex, Ulaganathapuram, Tvs Tollgate, Trichy - 620 020 Mr. Rajamanickam 7373703180

29 .Tuticorin # 36B,In Complex, Opp Kamaraj College, Nr.Head Post Office,Tiruchendur Road, Tuticorin-628003 Mr.Ukkirapandi 7373703129

30 .Vellore # 297H,1St Floor,Ktj Complex,Rto Road,Sathuvacheri,Vellore-632009. Mr.Vinayagamoorthy 7373703137

31 .Villupuram#  9,2Nd Floor,District Collector Office, Villupuram District-605103. Mr.Raju 7373703138

32 .Virudhunagar # 103/B2, Katcheri Road, 2Nd Floor Bank Of India Upstairs Virudhunagar District – 626001 Mr.Rafik Raja 7373703139



Recent Posts

Total Pageviews

Code