புதிய பள்ளிகள் தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு- pro avail - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, December 7, 2020

புதிய பள்ளிகள் தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு- pro avail



குடியிருப்பு பகுதிகளில் புதிதாகதொடக்க, நடுநிலைப்பள்ளிகள்தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல்தயாரித்து அறிக்கை அனுப்பபள்ளிக்கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடுஒருங்கிணைந்த பள்ளி கல்விஇணை இயக்குநர், அனைத்துமாவட்ட முதன்மைக்கல்விஅலுவலர்களுக்கும் அனுப்பி உள்ளசுற்றறிக்கை: தமிழ்நாடு இலவசகட்டாய கல்வி உரிமை விதிகள்2011ல், ஒவ்வொரு குடியிருப்புபகுதியிலும் 1 கி.மீ. தொலைவிற்குள் தொடக்கப்பள்ளிவசதியும், 3 கி.மீ. தொலைவிற்குள்நடுநிலைப் பள்ளி வசதியும்இருத்தல் வேண்டும் எனவரையறுக்கப்பட்டுள்ளது. பள்ளிவசதி இல்லாத குடியிருப்புகள்விவரம் ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி கட்டமைப்பில்கூறியுள்ளவாறு புவியியல் தகவல்முறை மற்றும் கள ஆய்வு மூலம்கடந்த 2018-19ம் ஆண்டுகண்டறியப்பட்டுள்ளது.


இந்தகுடியிருப்புகளில் உள்ளகுழந்தைகள் 2021-2022ல்பாதுகாப்பாக பள்ளிக்கு செல்லமேற்கொள்ள வேண்டிய உத்திகள்குறித்த விவரங்கள் மற்றும் பள்ளிவரைபட பயிற்சி மூலம் பெறப்படஉள்ளது. அதன்படி குடியிருப்பிற்குஅருகில் 5 கி.மீ தொலைவில்உயர்நிலைப்பள்ளிஇல்லையென்றால், நடுநிலைப்பள்ளியைஉயர்நிலைப்பள்ளியாகவும், 8 கி.மீதொலைவில் 

மேல்நிலைப்பள்ளி இல்லாதநிலையில், உயர் நிலைப்பள்ளியைமேல்நிலைப்பள்ளியாகவும் தரம்உயர்த்தலாம். 8ம் வகுப்பில் 70 மாணவர்களுக்குக் குறையாமல்சேர வாய்ப்பு உள்ளநடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாகவும், 10ம்வகுப்பில் குறைந்தபட்சம் 100 மாணவர்கள் உள்ளஉயர்நிலைப்பள்ளிகளைமேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம்உயர்த்தலாம்.


எஸ்சி மக்கள் அதிகமாக உள்ளஇடங்கள், பெண்கள் பள்ளிகளைதரம் உயர்த்தலாம். போக்குவரத்துவசதி இல்லாத மற்றும் பள்ளி வசதிஇல்லாத குடியிருப்புகளில் உள்ளகுழந்தைகள் பயில உண்டுஉறைவிட பள்ளிகள், விடுதிகள்வழங்கவும்கூறப்பட்டுள்ளது.இவ்விவரங்கள்அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்விஅலுவலர்கள், வட்டாரக் கல்விஅலுவலர் அலுவலகங்களில்வட்டார வள மையங்கள் சார்ந்தபள்ளிகளில் பராமரிக்கப்படவேண்டும்.இவ்வாறு அதில்கூறியுள்ளார்.

பொதுமக்களின் பங்களிப்பு

நடுநிலைப்பள்ளியினைஉயர்நிலைப் பள்ளியாக தரம்உயர்த்த பொதுமக்கள் பங்குத்தொகை ₹1 லட்சமும், உயர்நிலைப்பள்ளியைமேல்நிலைப்பள்ளியாக தரம்உயர்த்த ரூ2 லட்சமும் அரசுகணக்கில் செல்லுத்தப்படவேண்டும். மாநகராட்சிக்கு 8 கிரவுண்டு, மாவட்ட தலைமையகம் 8 கிரவுண்டு, நகராட்சிக்கு 10 கிரவுண்டு, பேரூராட்சியில் ஒருஏக்கர், ஊராட்சியில் 3 ஏக்கர் இருக்கவேண்டும் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.

CLICK HERE TO VIEW THE DIR.PRO

Post Top Ad