அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் , வணக்கம் ,
தமிழ்நாட்டில் 01.04.2003 முதல் தமிழக அரசுப் பணியில் சேரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துப்பட்டுவருகிறது . இத்திட்டத்தினால் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் பணிக்கொடை மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட எவ்வித பலனுமின்றி வாழ்வாதாரம் இழந்து மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்பது 2016 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுகவின் தேர்தல் வாக்குறுதியாகவும் இடம் பெற்றிருந்தது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டதையே மீண்டும் நடைமுறைப்படுத்த ஆவண செய்ய வேண்டும் என்று 6 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்பங்கள் சார்பான நமது வேண்டுகோளின் மீது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனம் ஈர்க்கப்பட அனைவரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போம்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் CPS ஒழிப்பு இயக்கம்
0 Comments:
Post a Comment