அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள் : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, December 14, 2020

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள் :


அத்தி பழங்கள் மலச்சிக்கலை தடுத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன; 2-3 அத்திப்பழங்களை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, அவற்றுடன் தேன் கலந்து அடுத்த நாள் காலையில் உட்கொள்ளலாம். இது மலச்சிக்கலை முழுமையாக தடுத்து நிறுத்த உதவும்.

இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைட் கொழுப்பு உறுப்புகள் இதய நோய்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை; அத்தி பழங்களில் நிறைந்து இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் உடலில் காணப்படும் கரோனரி தமனியில் அடைப்பை ஏற்படுத்தும் தேவையற்ற செல்களை நீக்கி, இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கின்றது.

உலர்ந்த அத்தி பழங்களில் அதிக நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது; அத்தி பழத்தில் இருந்து உடல் 0.2 சதவிகித கொழுப்பை மட்டுமே எடுத்துக் கொள்ளும். ஆகையால், இது உடல் எடை குறைத்தலுக்கு ஏற்ற ஒரு உணவு ஆகும்.

Post Top Ad