'
பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, தபால் துறை 'சுகன்யா சம்ரிதி' எனும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது
. இதில் பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில், அவரது பெற்றோரோ, பாதுகாவலரோ தபால் நிலையத்தில் கணக்கு துவங்கலாம். குறைந்த சேமிப்பு தொகை, செலுத்தும் தொகைக்கு வரி விலக்கு என பலன்கள் உள்ளதால், இத்திட்டத்தில் பலரும் ஆர்வமாக கணக்கு துவங்குகின்றனர். இந்நிலையில் புதிய விதிமுறைகளை தபால்துறை புகுத்தியுள்ளது.
முதுநிலை கண்காணிப்பாளர் கூறுகையில், 'செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் வாரிசுதாரர் நியமனம் கட்டயாமாக்கப்பட்டு உள்ளது. அதனால், ஏற்கனவே கணக்கு துவங்கியவர்கள், உரிய வாரிசு தாரரை நியமிக்க வேண்டும், என்றார்.
0 Comments:
Post a Comment