பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


 

பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் வேளாண் விரிவாக்க மைய கட்டடப் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக காலாண்டு, அரையாண்டு தேர்வை வைத்து தேர்ச்சி அறிவிக்கப்பட்டது என்றும், இந்தாண்டு நிலைமை வேறு எனவும் கூறினார். 

மேலும், இந்தாண்டு 11 புதிய மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், வெளிநாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் வருவதாக கூறினாலும், ஆலயங்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்த அரசு அனுமதித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive