என்ஜினியரிங் பட்டதாரிகளின் கவனத்துக்கு - இந்திய விமான படையில் வேலை


இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 235 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்திய விமானப் படையில் பல்வேறு பிரிவுகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளையிங் பணிக்கு 69 இடங்கள், கிரவுன்ட் டியூட்டி (டெக்னிக்கல்) 96, கிரவுன்ட் டியூட்டி (நான் டெக்னிக்கல்) 70 என மொத்தம் 235 இடங்கள் உள்ளன.

இதற்கான கல்வித் தகுதி பிளையிங் பிரிவுக்கு கணிதம், இயற்பியலில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மற்றும் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு அல்லது பி.இ., /பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

கிரவுன்ட் டியூட்டி (டெக்னிக்கல்) பிரிவுக்கு கணிதம், இயற்பியலில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மற்றும் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

கிரவுன்ட் டியூட்டி (நான் டெக்னிக்கல்) பிரிவுக்கு பிளஸ் 2 படிப்பு மற்றும் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பிளையிங் பிரிவுக்கு 2.1.1998 - 1.1.2002க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கிரவுன்ட் டியூட்டி பிரிவுக்கு 2.1.1996 - 1.1.2002க்குள் பிறந்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை:

ஆன்லைன் எழுத்துத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, கோவை, நெல்லை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 250.

கடைசிநாள்: 30.12.2020.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive