எஸ்பிஐ வங்கியில் வேலை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, December 23, 2020

எஸ்பிஐ வங்கியில் வேலை


பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 452 துணை மேலாளர், பொறியாளர், உதவி மேலாளர், திட்ட மேலாளர், டெக்னிக்கல் போன்ற பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

(விளம்பர எண். CRPD/SCO-FIRE/2020-21/32, CRPD/SCO/2020-21/31, CRPD/SCO/2020-21/30, CRPD/SCO/2020-21/29, CRPD/SCO/2020-21/28, CRPD/SCO/2020-21/27, CRPD/SCO/2020-21/14)

மொத்த காலியிடங்கள்: 452

பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: Deputy Manager - 131
பணி: Engineer - 16
பணி: Manager - 46
பணி: Assistant Manager - 223
பணி: IT Security Expert - 15
பணி: Project Manager - 14
பணி: Application Architect - 05
பணி: Technical Lead - 02

தகுதி: சிஏ, பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்பிஏ, பிசிடிபிஎம் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதி மற்றும் வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். பொதுவாக 31.10.2020 தேதியின்படி 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.01.2021

மேலும் சம்பளம், பணி அனுபவம் போன்ற விவரங்கள் அறிய https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற லிங்கில் சென்று கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறிவிப்பாக படித்து தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Post Top Ad