தமிழக ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சியில் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் திடீரென ரத்து!


தமிழக ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சியில் துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.




தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பல்வேறு காலிபணியிடங்கள் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திற்கு தனித்தனியாக விளம்பரங்கள் அறிவிக்கப்பட்டன.

பலரும் ஆர்வமுடன் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தனர். இன்னமும் சில மாவட்டங்களில் விண்ணப்பிக்க கால அவகாசம் இருந்தால் பலரும் விண்ணப்பித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தென்காசி, வேலூர் என பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட விளம்பர அறிவிப்புகள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 தமிழக ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சியில் துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு நிரப்ப புதிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதா அல்லது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் இல்லை.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive