1,600 கி.மீ. தூரத்துக்கு சார்ஜ் ஏற்ற தேவையில்லை” 2021ல் அறிமுகமாகும் புதிய எலெக்ட்ரிக் கார்..!


 1,600 கி.மீ. தூரத்துக்கு சார்ஜ் ஏற்ற தேவையில்லை” 2021ல் அறிமுகமாகும் புதிய எலெக்ட்ரிக் கார்..!


இடையில் சார்ஜ் ஏற்ற அவசியமின்றி ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடும் புதிய வகை எலெக்டரிக் காரை அமெரிக்காவை சேர்ந்த ஆப்டெரா இ.வி. (Aptera EV) நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஏர் பிளைன் வடிவம் கொண்ட கார் லைட்வெயிட் ரகத்தை சேர்ந்தது எனவும், சோலார் பவர் மூலம் நாளொன்றுக்கு 64 கிலோ மீட்டர் வரை சார்ஜ் ஏறும் வசதி உடையது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

காரிலிருக்கும் 100 கிலோ வாட் பேட்டரி மூலம் 1,600 கிலோ மீட்டருக்கு செல்லலாம் எனவும், காரின் விலை இந்திய மதிப்பில் 19 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் முதல் 33 லட்சத்து 97 ஆயிரம் வரை இருக்கும் எனவும் ஆப்டெரா தெரிவித்துள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive