:பள்ளிகள் திறப்பை விட, மாணவர்களின் உயிர் தான் முக்கியம்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் கூறியதாவது: தமிழக மாணவர்கள், மருத்துவத் துறை மட்டுமின்றி, ஐ.ஐ.டி., போன்ற துறைகளில் சேர்ந்து படிப்பதற்கு, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் ஜனவரி, 15ம் தேதிக்குள், அரசு பள்ளிகளில், 7,200 'ஸ்மார்ட்' வகுப்புகள் அமைக்கப்படும். பள்ளிகளில் உள்ள, 80 ஆயிரம் கரும்பலகைகள் அகற்றப்பட்டு, ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்படும்.
பள்ளி திறப்பதை விட, மாணவர்களின் உயிர் தான் முக்கியம் என, முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே, கல்வியாளர்கள், மருத்துவக் குழுக்கள், பெற்றோர் போன்றவர்களின் கருத்துகளை கேட்டறிந்து, பள்ளி திறப்பு பற்றி, முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு, அவர் கூறினார்.
Home »
» பள்ளிகள் திறப்பை விட, மாணவர்களின் உயிர் தான் முக்கியம்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்
0 Comments:
Post a Comment