புதிய தொடக்கப் பள்ளி மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகள் கருத்துருக்களை அனுப்ப உத்தரவு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, December 19, 2020

புதிய தொடக்கப் பள்ளி மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகள் கருத்துருக்களை அனுப்ப உத்தரவு.


தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலைகளில் உள்ள பள்ளி வசதி இல்லாத அனைத்து குடியிருப்புகளிலும் பள்ளி வரைபடப் பயிற்சி மேற்கொண்டு , தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011 ன்படி , தேவையின் அடிப்படையில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய குடியிருப்புகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டிய தொடக்கப் பள்ளிகளை கண்டறிந்து , சார்ந்த கருத்துருக்களை GIS வரைபடத்துடன் 21.12.2020 க்குள் அனுப்புமாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் கோரப்பட்டுள்ளது. எனவே , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் எதிர்வரும் ஆண்டு வரைவுத் திட்டம் 2021 - 22 ல் சமர்ப்பிக்க ஏதுவாக புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய குடியிருப்புகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டிய தொடக்கப் பள்ளிகள் சார்ந்த கருத்துருக்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து , கீழ்காணும் விவரங்களுடன் முழுவடிவில் அனுப்பப்பட வேண்டும். 


> புதிய தொடக்கப் பள்ளி மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதி சார்ந்த விவரங்களை புவியியல் தகவல் முறைமை ( GIS Map ) வரைபடத்துடன் அளிக்கப்பட வேண்டும். ( அருகாமையில் உள்ள பள்ளிகளின் விவரங்களுடன் ) மேலும் , புவியியல் தகவல் முறைமையை பயன்படுத்தி தேவையின் அடிப்படையில் திட்டமிடுதலுக்கு சம்மந்தப்பட்ட வட்டார மையம் சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரையும் ( ACCESS & GIS ) ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.  புதிய தொடக்கப் பள்ளி தொடங்குவதற்கான இடம் சார்ந்த கிராம நிர்வாக அலுவலரின் அசல் சான்று இணைக்கப்பட வேண்டும் . புல வரைபடத்தில் பள்ளிக்கான இடம் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். சிட்டா , பட்டா போன்ற நிலம் சார்ந்த ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். மேலும் , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பள்ளி இடம் சார்ந்த விவரங்கள் முழுமையாக நிரப்பப்பட வேண்டும் .

> நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிக்கு கட்டட வசதி கூடுதல் வகுப்பறைக்கான இடவசதி , கழிப்பறை வசதி , குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட வேண்டும்.


Dir Proceedings - Download here...


Post Top Ad