அரியர் தேர்வில் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்ட மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடத்தில் கூடுதல் மதிப்பெண்களை பெற, நடப்பு செமஸ்டரில் தேர்வு எழுதலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.




இதுகுறித்து சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 

சென்னைப் பல்கலைக்கழகத்தின் நடப்பு செமஸ்டர் தேர்வு வரும் 21ம் தேதி முதல் 2021 ஜனவரி 6ம் தேதி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது. 

இந்த செமஸ்டர் தேர்வின் போதே, அரசால் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்ட அரியர் மாணவர்களும் தங்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் தேவைப்பட்டால், மீண்டும் தேர்வை எழுதி கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அவரவர் படித்த கல்லூரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

நடப்பு செமஸ்டர் தேர்வை எழுதுவதன் மூலம், அரசால் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்ட மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களைப் பெற முடியும். மேலும் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற அரியர் அல்லாத மாணவர்களும் கூடுதல் மதிப்பெண்கள் தேவை என்றால் நடப்பு செமஸ்டரில் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

 இது தவிர ஏற்கனவே அரியர் வைத்திருந்து கடந்த ஏப்ரல் - மே மாத செமஸ்டரின் போது தேர்வு எழுத விண்ணப்பிக்காத மாணவர்களும் நடப்பு செமஸ்டரில் அரியர் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive