நீட் பயிற்சியை தொடர்ந்து ஐஐடி, ஜெஇஇக்கு பயிற்சி : டெல்லி நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, December 15, 2020

நீட் பயிற்சியை தொடர்ந்து ஐஐடி, ஜெஇஇக்கு பயிற்சி : டெல்லி நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம்


தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலைப்பிரிவு மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் ஐஐடி, ஜெஇஇ, போட்டி தேர்வுகளில் கலந்துக்கொண்டு இந்திய தொழில்நுட்ப கழக நிறுவனகளில் சேர்வதற்கு வசதியாக, டெல்லியில் உள்ள நிறுவனத்துடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்த ஒப்பந்த நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முன்னிலையில், அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பயிற்சி நிறுவனமான நெக்ஸ்ட் ஜென் பிரைவேட் லிமிடெட்டின் தலைமைச் செயல் அலுவலர் கவுரவ், ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

அப்போது தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் உடன் இருந்தார். இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் டிசம்பர் 21ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம்.

இதனை தொடர்ந்து மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 2021 ஜனவரி 4ம் தேதி முதல் தொடங்கும். இப்பயிற்சிக்கான பதிவுசெய்ய விரும்புவோர் http://play.google.com/store/apps/details?id=com.vidhyaeducation.android ஆகிய இணைய தளங்களில் பதிவு செய்யலாம். பயிற்சியும் இந்த இணைய தளங்கள் மூலம் நடக்கும்.

Post Top Ad