புதுச்சேரி அரசு கல்வித்துறை ஒரு இளம் தலைமயாசிரியரை இழந்துவிட்டது,இழந்துவிட்டதா அல்லது காவுக்கு காரணமாகிவிட்டதா ? என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.அவருக்கு கொரானா வந்ததற்கான காரணம் இதுதான் எனத் தெரியாவிட்டாலும் அவர் கடந்த வாரம் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை மக்களின் நேரில் தொடர்புள்ள ரேஷன் அரிசி வழங்கும் பணியில் இருந்தார் என்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ரேஷன் அரிசி வாங்க வந்த மக்களிடமிருந்து இவருக்கு பரவியதா ? அல்லது இவரிடமிருந்து மக்களுக்கு கொரானாப் பரவல் இருந்துள்ளதா ? என்பதனையும் யோசிக்க வைத்துள்ளது.
தமிழக பாடத்திட்டத்தினை பின்பற்றும் புதுச்சேரி அரசு ,9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்துக் கொண்டிருக்கிறது.ஏற்கனவே அன்னைத் தெரசா மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் இருவர் கொரானாவால் பாதிக்கப்பட்டபோதும் சரி,திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வேலாயுதம் பாதிக்கப்பட்ட போதும் சரி,பள்ளி/வகுப்பு வளாகங்கள் Sanitize பண்ணாமலேயே அப்படியே வகுப்புகள் நடந்து வருவதும் கவலையளிக்கிறது.
இதுவே SBI,LVB வங்கி ஊழியர்கள்கள் கொரானாவால் பாதிக்கப்பட்டபோது வங்கி 2 நாட்களுக்கு மூடப்பட்டு sanitize செய்யப்பட்டதையும் இப்போது நினைவு கூறுகிறேன்.
கல்வித்துறை கொரானாப் பரவலை அலட்சியமாகவே கையாள்கிறதோ என் கிற ஐயம் எழுகிறது.கொரானாவின் பலி தலைமையாசிரியர் திரு.சிவக்குமார் அவர்களோடு நின்று விடுமா ?
அல்லது தொடருமா ?
என்பது கல்வித்துறை கையிலும் உள்ளது.
0 Comments:
Post a Comment