ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
படுகர் இன மக்கள் 'அட்டி' என்று அழைக்கப்படும் கிராமங்களில் வசித்து வருகிறார்கள். படுக இன மக்களின் குல தெய்வமாக ஹெத்தையம்மன் உள்ளது. படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி வரும் 30ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment