ஆந்திராவில் ஏற்பட்ட மர்மநோய் காரணம் என்ன தெரியுமா..? மக்கள் அதிர்ச்சி!



ஆந்திராவில் எலூரு பகுதியில் மர்மநோயால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு தண்ணீரில் அதிகளவு கலந்திருந்த குளோரினும், கிருமி நாசினியும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் எலுரு என்ற நகரின் பல இடங்களில் வசித்த 500 பேர் மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அவர்களைச் சோதனை செய்தபோது, நோயாளிகளின் ரத்தத்தில் ஈயம் மற்றும் நிக்கல் அதிகமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் போது தண்ணீரில் குளோரின் பொடி அதிகமாக கலந்திருக்கலாம் என்றும், சானிடைசர் எனப்படும் கிருமி நாசினியும் இணைந்து அப்பகுதி நீரை மாசுபடுத்தியிருக்கலாம் என ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சர் கிருஷ்ணா சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive