2024 முதல் 'வெயிட்டிங் லிஸ்ட்' முறையே கிடையாதா? - ரயில்வே விளக்கம்


2024-ஆம் ஆண்டு முதல் பயணிகள் காத்திருப்போர் பட்டியல் நீக்கப்படும் என்று பரவிவரும் தகவல் குறித்து ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்ட விளக்கம்:

'தேசிய ரயில் திட்ட வரைவறிக்கை தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களும் இணையதளங்களும் அதிகளவில் செய்திகளை வெளியிட்டன.

அதில், 2024-ஆம் ஆண்டு முதல் பயணிகள் காத்திருப்போர் பட்டியல் (வெயிட்டிங் லிஸ்ட்) நீக்கப்படும் அல்லது, 2024-ஆம் ஆண்டு முதல் உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டு உடையவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்யமுடியும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளதாக ஒரு சில செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தேவைக்கேற்ப ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ரயில்வே துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

 இதன்மூலம் காத்திருப்போர் பட்டியலில் பயணிகள் இடம்பெறுவது குறைக்கப்படும். ரயிலில் உள்ள மொத்த இருக்கைகளைவிட பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது, காத்திருப்போர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த முறை நீக்கப்படாது. இருப்பைவிட தேவை அதிகமாகும் சமயங்களில் காத்திருப்போர் பட்டியல் பயன்படுத்தப்படுகிறது' என்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive