மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஸ்பைடர்மேனாக மாறிய ஆசிரியர்!

சில நேரங்களில், ஜார்ஜ் மனோலோ வில்லர்ரோயல் ஸ்பைடர்மேன். சில நேரங்களில், அவர் ஃப்ளாஷ் அல்லது கிரீன் லேண்டன்.
ஆனால் அவர் எப்போதும் ஒரு ஆசிரியர். ஊரடங்கு நாட்களில் தனது ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சூப்பர் ஹீரோக்கள் ஆடைகள் அணிந்து பாடம் எடுத்து வருகிறார். இதன்மூலம் தனது குழந்தை பருவ கனவுகளை அவர் வாழ்ந்து வருகிறார்.
அவரது வகுப்புகள் மிகவும் பிரபலமாகிவிட்டன. சூப்பர் ஹீரோக்கள் உடையணிந்த ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொள்ள வீட்டில் குழந்தைகளுக்கு இடையே மடிக்கணினிக்காக சண்டை நடக்கிறது.
"அவர்கள் எனக்கு முன்னதாக வகுப்புகளுக்கு வருகிறார்கள். அவர்கள் முதலில் எந்த சூப்பர் ஹீரோ திரையில் இன்று தோன்றுவார் என்று பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறார்கள்" என்று வில்லர்ரோயல் கூறியுள்ளார்.
33 வயதான வில்லர்ரோயல் அவருடைய அறை சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களின் முகமூடிகள் மற்றும் ஆடைகளால் நிரம்பியுள்ளது. பொலிவியன் தலைநகரில் வசிக்கும் வில்லர்ரோயல், சான் இக்னாசியோ கத்தோலிக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 9 முதல் 14 வயது வரை உள் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
நாற்பத்தி ஐந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளைப் பின்பற்றுகிறார்கள்.
வில்லார்ரோயல் தான் அணிந்த ஆடைகளை தானே உருவாக்குகிறார். இதுகுறித்து பேசியுள்ள அவர் "பாரம்பரிய கல்வி முறை தேக்கமடைந்துள்ளது, கரோனா தொற்று நோய்க்குப்பிறகு கல்வி உட்பட அனைத்தும் மாறும்.
மாணவர்கள் நம்முடைய உலகில் நுழைந்துள்ளனர், இப்போது நாம் அவர்கள் உலகத்திற்குள் செல்லும் நேரம் வந்துவிட்டது, அது அரட்டை அடிப்பது. அவர்களுக்கு வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது குறைவாக பேசுவார்கள். அதேநேரம் தொழில்நுட்பங்கள் மூலம் ஆன்லைனில் பாடம் எடுக்கும் போது அவர்கள் அதிகமாக பேசுகிறார்கள், நிறைய கேள்விகளை கேட்கிறார்கள். அவர்கள் நமக்கு ஆசிரியர்களாகி நமக்கு தொழில்நுட்பங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை கற்றுக்கொடுக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment