நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் முதல்வர் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, June 17, 2020

நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் முதல்வர்

நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் முதல்வர்

நீட் ஆன்லைன் பயிற்சி வகுப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ  படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதனை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக  பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த 2017 - 2018ம் கல்வி ஆண்டு முதல் இலவச நீட் பயற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


 2019 - 2020ம் கல்வி ஆண்டுக்கான நீட் பயற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் 412 மையங்களில் நடத்தப்பட்டு வந்தன. வார இறுதி நாட்கள், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மட்டும் நீட் பயற்சி  வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மொத்தம் 27 நாட்கள் மட்டுமே நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான செய்முறை தேர்வு தொடங்கியதையடுத்து கடந்த ஜனவரி  மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

இதற்கிடையே, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தப்பின்னும், நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி  வகுப்பை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தீரஜ் குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.  இதன்படி, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு Amphisoft Technologies நிறுவன இணையதளம் மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நாள்தோறும் 4 மணிநேர பயிற்சி, 4 மணிநேர பயிற்சித் தேர்வர்கள் நடத்தப்படவுள்ளன. 12-ம் வகுப்பு மாணவர்கள் 7,420 பேர் நீட் இணைய பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ளனர். இலவச நீட் பயற்சி வகுப்புகளில் பயின்ற மாணவர்களில் கடந்த 2017 -  2018ம் கல்வி ஆண்டில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை. 2018 - 2019ம் ஆண்டில் 5 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad