ஆண்களை விட இனிப்பை அதிகம் விரும்பும் பெண்கள்: காரணம் என்ன?.

ஆண்களை விட இனிப்பை அதிகம் விரும்பும் பெண்கள்: காரணம் என்ன?..
ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக சர்க்கரை உட்கொள்கிறார்கள். இனிப்பு கலந்த பலகாரங்கள் உட்கொள்வதற்கும் அலாதி பிரியம் காட்டுகிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவிதமாக வயதானவர்கள் அதிகமாக இனிப்பு வகைகளை நாடுகிறார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், இந்தியாவில் இயங்கும் சர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து இதுபற்றிய ஆய்வை மேற்கொண்டன. ஆய்வு முடிவுப்படி பெண்கள் தினமும் நுகரும் சர்க்கரையின் சராசரி அளவு 20.2 கிராமாக இருக்கிறது. ஆண்கள் சராசரியாக 18.7 கிராம் என்ற அளவில் சர்க்கரையை உட்கொள்கிறார்கள்.

பெருநகரங்களில் வசிப்பவர்களை மையப்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. சர்க்கரையை அதிகம் சேர்த்துக்கொள்ளும் நகரங்களின் பட்டியலில் மும்பை முதலிடத்தில் உள்ளது. அங்கு சர்க்கரை உட்கொள்ளும் சராசரி அளவு 26.3 கிராமாக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக டெல்லி (23.2 கிராம்), பெங்களூரு (19.3 கிராம்), கொல்கத்தா (17.1 கிராம்), சென்னை (16.1 கிராம்) என்ற அளவில் இருக்கின்றன.

36 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிகமாக சர்க்கரை (20.5 கிராம்) எடுத்துக்கொள்கிறார்கள். 60 வயதை கடந்தவர்களும் தினமும் சராசரியாக 20.3 கிராம் சர்க்கரையை சேர்த்துக்கொள்கிறார்கள். 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சாப்பிடும் சர்க்கரை அளவு 19.9 கிராமாக உள்ளது. பொதுவாக குழந்தைகள்தான் அதிகமாக இனிப்பு பலகாரங்களை சாப்பிடுவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் பள்ளி செல்லும் குழந்தைகள் 15.6 கிராம் முதல் 17.6 கிராம் வரையிலான அளவிலேயே சர்க்கரையை நுகர்கிறார்கள்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive