கொரோனாவை எதிர்க்க தினமும் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்!

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க, சூப் வகைகள், சிறுதானிய உணவுகள், முட்டை, காய்கறிகள், பழவகைகள், உலர் பழவகைகள், பால் போன்ற உணவுகளை சாப்பிடவேண்டும். தினமும் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளையும் முறைப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்" என்கிறார், ஊட்டச்சத்து துறை நிபுணர் பிரியா பாஸ்கர்.
ஈரோட்டைச் சேர்ந்த இவர் தரும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுப்பட்டியல் இது..
காலை 7 மணி - மிளகு கஷாயம்.
8.30 மணி- கோதுமை தோசை, தக்காளி சட்னி, பாதாம் போன்ற பருப்பு வகைகள் மற்றும் பூண்டு பால்.
11 மணி - மாதுளை, எலுமிச்சை ஜூஸ்.
மதியம் 1 மணி - சிவப்பு அரிசி சாதம், நாட்டு காய்கறி கூட்டு, பசலைக்கீரை வெஜ் மிக்ஸ், வெண்டைக்காய் பிரட்டல், தக்காளி இஞ்சி ரசம், பழம் கலந்த தயிர் சாதம்.
மாலை 5 மணி - சோயா பீன்ஸ் சூப், கிரீன் சாலட்.
இரவு 7.30 மணி - ராகி வெங்காய கல்தோசை, அவகேடா தக்காளி தொக்கு.
9.30 மணி - பனங்கற்கண்டு பால்.